Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும்
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: செப்டம்பர் 15 முதல் பண மழையில் நனையப்போகும் ராசிகள்!
Venus Transit In Leo On September 2025: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் 27 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர்.
இப்படி சுக்கிரன் ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் ஒருவரது நிதி நிலை, காதல் வாழ்க்கை, அழகு போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது சுக்கிரன் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த சுக்கிரன் செப்டம்பர் 15 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த சிம்ம ராசியின் அதிபதி சூரியன். சூரியனின் ராசிக்கு சுக்கிரன் நுழைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக, செழிப்பாக இருக்கப் போகிறது. மேலும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதோடு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும். இப்போது சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரனால் நற்பலனைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படப் போகிறது. புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புள்ளது. முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வணிகர்களுக்கு நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். வீட்டில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் நடத்தை மற்றவர்களை ஈர்க்கும் வகையில் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் உயர் அதிகாரிகளை ஈர்க்குமாறு இருக்கும். உறவினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிப்பதோடு, புதிய பொறுப்புக்களும் வழங்கப்படும். புதிதாக தொடங்கும் எந்த வேலையும் வெற்றிகரமாக நடக்கும். கலை, இலை, படைப்புத் துறையில் இருப்பவர்களின் திறமை பிரகாசிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications