Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
1 வருடம் கழித்து சிம்மம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது...
Venus Transit In Leo 2025 After 1 Year: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, காதல், ஆடம்பரம், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். மேலும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். இந்த சுக்கிரன் ஒரு ராசியில் 1 மாத காலம் இருப்பார். சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அந்த வகையில் சுக்கிரன் வருகிற செப்டம்பர் மாதத்தில் சூரிய பகவானின் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். சிம்ம ராசிக்கு சுக்கிரன் 1 வருடத்திற்கு பின் செல்லவுள்ளார். மேலும் இந்த சுக்கிர பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர்.

அதுவும் தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பதோடு, சிக்கிய பணத்தையும் பெற வாய்ப்புள்ளது. மேலும் புதுமண தம்பதிகளுக்கு குழந்தை வரமும் கிடைக்கலாம். இப்போது 1 வருடத்திற்கு பின் சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரனால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். மேலும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகளும் வெற்றிகரமாக நிறைவடையும். புத்திசாலித்தனத்தால் பல காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணியிடத்தில் கொடுக்கப்பட்ட இலக்குகளில் கவனம் செலுத்தி திறம்பட அடைந்து வெற்றி பெறுவீர்கள். சிக்கிய பணத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. குறுகிய அல்லது நீண்ட தூர பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல ஆதாயங்களைத் தரும்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தினசரி வருமானத்தில் உயர்வு ஏற்படும். அதோடு புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளை செய்தாலும், நல்ல ஆதாயங்கள் கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம்.
கும்பம்
கும்ப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இக்காலத்தில் திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரலாம். மேலும் புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கலாம். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், ஒவ்வொரு வேலையிலும் வெற்றிகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான பாதை திறக்கப்படும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications