Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் குவியும்.. உங்க ராசி இதுல இருக்கா?
Venus Transit In Hasta Nakshatra 2025: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றுவது மட்டுமல்லாமல், நட்சத்திரத்தையும் மாற்றி, மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நேர்மறை அல்லது எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும்.
நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். மேலும் இவர் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அதோடு அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.

அந்த வகையில் சுக்கிரன் அக்டோபர் 17 ஆம் தேதி ஹஸ்தம் நட்சத்திரத்திற்குள் நுழைந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன். சுக்கிரன் சந்திரனின் நட்சத்திரத்திற்கு நுழைந்திருப்பதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
குறிப்பாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, மகத்தான செல்வத்தை பெறுவார்கள். அதோடு தொழில் ரீதியாகவும் நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறுவார்கள். இப்போது சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வும், புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்புக்களும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். முதலீடுகளை செய்தால் இரட்டிப்பு லாபத்தைப் பெறுவீர்கள். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் சுக்கிரனின் நட்சத்திர பெயர்க்கியால் வருமானத்தில் நல்ல உயர்வைக் காண்பார்கள். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் இரட்டிப்பு லாபத்தைப் பெறுவார்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான தொழில் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். கேட்டரிங், ஜவுளி வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. ஊடகம், திரைப்பட துறையில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மேலும் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
