Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம் -
இஞ்சி தொகையல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - காரசாரமா ஆரோக்கியமா இருக்கும் -
ஆகஸ்ட் மாதம் 2 முறை உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம்
2026-ல் நடக்கும் முதல் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
Venus Transit In Capricorn On January 2026: வேத ஜோதிடத்தில், அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். மேலும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். அதோடு இவர் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார்.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் முதல் மாதத்தில் சுக்கிரன் மகர ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த பெயர்ச்சியானது ஜனவரி 13 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த சனி பகவானின் ராசிக்கு சுக்கிரன் செல்வது சிறப்பான பலன்களைத் தரும். ஏனெனில் ஜோதிடத்தின் படி சனியும், சுக்கிரனும் நட்புணர்வு கொண்டவர்கள். சுக்கிரனின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

இருப்பினும் இந்த சுக்கிர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இதன் விளைவாக எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைப்பதுடன், சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். மேலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போது 2026 ஆம் ஆண்டில் நடக்கும் முதல் சுக்கிர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் அதிகரிக்கும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
மகரம்
மகர ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். புதிய நட்புகள் மற்றும் உறவுகள் கிடைக்கும். இந்த உறவுகளால் எதிர்காலத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். ஆளுமை மேம்படும். தினசரி வருமானத்தில் உயர்வு ஏற்படும். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், வெற்றிகளையும் பெறுவார்கள். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். மனநிலை மேம்படும். உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். மேலும் பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications