Latest Updates
-
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா?
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
Venus Retrograde In Libra On 03 October 2026: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். மாதம் ஒருமுறை தனது நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் சுக்கிரன், தற்போது தனது சொந்த ராசியான துலாம் ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த சுக்கிரன் அக்டோபர் மாத தொடக்கத்தில் வக்ரமாகவுள்ளார். அதுவும் அக்டோபர் 03 ஆம் தேதி முதல் சுக்கிரன் வக்ரமடையவுள்ளார். இந்நிலையில் சுமார் 42 நாட்கள் வரை இருக்கப் போகிறார். அதன் பின் நவம்பர் 14 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிப்பார். சுக்கிரனின் இந்த வக்ர பயணத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
முக்கியமாக இந்த வக்ர நிலையில் சுக்கிரன் பலவீனமாக இருப்பதால், சில ராசிக்காரர்கள் நிறைய பிரச்சனைகளை எதிர்கொண்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் பொற்காலமாக இருக்கப் போகிறது. இப்போது சுக்கிரன் வக்ரமடைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் பல சாதகமான மாற்றங்களைக் காண்பார்கள். வாழ்க்கையில் இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகள் குறையும். நீண்ட காலமாக சிரமப்பட்டு வந்த ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நீண்ட காலமாக நடந்து வந்த நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து எதிர்பாராத அளவில் நிதி நன்மைகளைப் பெறக்கூடும். வீட்டுச் சூழல் மேம்பட வாய்ப்புள்ளது. மன அழுத்தம் குறைவதால் நீங்கள் மிகவும் நிம்மதியாக உணரக்கூடும்.
மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கலாம். சிலர் கடந்தகால முதலீடுகளிலிருந்து பயனடைய வாய்ப்புள்ளது. இதன் மூலம் நிதி நிலைமை வலுவடைவதோடு, கடன் தொல்லைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். இந்தக் காலகட்டத்தில், உங்கள் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தினால் வாழ்வில் நல்ல உச்சத்தை தொடுவீர்கள்.
மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வியாபாரிகளுக்கு புதிய திட்டங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும். ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். ஊடகம், ஃபேஷன், கலை துறையில் இருப்பவர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற செலவுகளையும் கட்டுப்படுத்துவது முக்கியம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
