Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
10 ஆண்டு கழித்து ஆண்டின் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசியின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்...
Venus Nakshatra Transit On 30 December 2025: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். மேலும் இவர் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார்.
இந்த சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

அந்த வகையில் சுக்கிரன் தற்போது தனுசு ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2025 டிசம்பர் 30 ஆம் தேதி சுக்கிரன் பூராடம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். ஆண்டின் இறுதியில் நடக்கும் இந்த சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
முக்கியமாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகிறது. இதன் விளைவாக நிதி நிலையில் உயர்வும், தொழிலில் முன்னேற்றமும் ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்போது சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அதுவும் அவ்வப்போது எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீரும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். சுக்கிரனின் அருளால் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். பணப் பிரச்சனைகள் தீரும். வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலதிபர்கள் எதிர்பாராத அளவில் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் தைரியமும் வீரமும் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலதிபர்கள் குறிப்பிடத்தக்க நல்ல லாபத்தைப் பெறுவார்கள். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, உடல்நலம் மேம்படும். மன அழுத்தம் குறையும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications