Latest Updates
-
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்!
சுக்கிரன் உருவாக்கியுள்ள கேந்திர திரிகோண ராஜயோகம்: இன்று முதல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகுது..
Kendra Trikona Rajyog 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியும் கூட. இப்படிப்பட்ட சுக்கிரன் ஒரு ராசியில் 26 நாட்கள் வரை இருப்பார்.
சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், அதன் தாக்கம் ஒருவரது காதல், செல்வம் ஆகியவற்றில் காணப்படும். அந்த வகையில் சுக்கிரன் ஜூன் 29 ஆம் தேதி தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்குள் நுழைந்தார். சுக்கிரன் ரிஷப ராசியில் நுழைந்ததால் மாளவ்ய ராஜயோகம் மட்டுமின்றி, கேந்திர திரிகோண ராஜயோகமும் உருவாகியுள்ளது.

இந்த ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். பொதுவாக ராஜயோகங்களானது மங்களகரமான யோகங்களாகும். இதனால் ஒருவரது வாழ்க்கையில் நல்ல பலன்களே கிடைக்கும். அந்த வகையில் கேந்திர திரிகோண ராஜயோகத்தால், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.
முக்கியமாக வருமானத்தில் உயர்வு, பணியிடத்தில் பதவி உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இது தவிர வெளிநாடு செல்வதற்கான யோகமும் வரலாம். இப்போது சுக்கிரனால் உருவாகியுள்ள கேந்திர திரிகோண ராஜயோகத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகிவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அவ்வப்போது திடீர் நிதி நன்மைகளைப் பெறுவார்கள். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடின உழைப்புக்கான பலன் கட்டாயம் கிடைக்கும். பணியிடத்தில் சிறப்பான செயல்திறன் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. முக்கியமாக வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியிருப்பதால், ரிஷப ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையும் அவரது தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். சுக்கிரன் 6 ஆவது வீட்டின் அதிபதி. எனவே நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். கூட்டு தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசித்து, ஒவ்வொரு வேலையிலும் வெற்றிகள் கிடைக்கும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரடும். காதலில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்க நேரிடும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications