Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சுக்கிரன் உருவாக்கிய கேந்திர திரிகோண ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு லட்சுமியின் அருளால் செல்வம் பெருகும்..
Venus Made Kendra Trikona Rajyog 2024: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் அழகு, ஆடம்பரம், செல்வம், ஈர்ப்பு, மகிழ்ச்சி ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் சுக்கிரன் செப்டம்பர் 18 ஆம் தேதி தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழைந்துள்ளார். சுக்கிரன் துலாம் ராசிக்குள் நுழைந்ததுமே பல சுப யோகங்கள் உருவாகி வருகின்றன. அதில் சுக்கிரன் துலாம் ராசியில் நுழைந்ததும், மாளவ்ய ராஜயோகம், பராக்கிரம யோகம், கேந்திர திரிகோண ராஜயோகம் போன்றவை உருவாகியுள்ளன. இவ்வளவு யோகங்கள் உருவாகியிருப்பதால், அதன் சிறப்பு தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

முக்கியமாக சுக்கிரன் துலாம் ராசியில் நுழைந்ததும் உருவாகியுள்ள கேந்திர திரிகோண ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருப்பதோடு, முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும், நல்ல நிதி ஆதாயங்களும் கிடைக்கும்.
ஜோதிடத்தின் படி, சுக்கிரன் கேந்திரத்தில் அதாவது 4, 7, 10 ஆம் வீடு மற்றும் திரிகோணத்தில் 5, 9, 1 ஆம் வீட்டில் அமைந்தால் இந்த கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகும். இப்போது சுக்கிரனால் உருவாகியுள்ள கேந்திர திரிகோண ராஜயோகத்தால் லட்சுமி தேவியின் ஆசியைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் கேந்திர திரிகோண ராஜயோகத்தால், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைப் பெறும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரனால் உருவாகியுள்ள கேந்திர திரிகோண ராஜயோகமானது தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைத் தரும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். தந்தை மற்றும் தாயுடனான உறவு மேம்படுவதோடு, அவர்களின் ஆதரவும் கிடைக்கும். இதன் மூலம் அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றியைப் பெறுவதோடு, நல்ல பணத்தையும் சம்பாதிப்பீர்கள்.
குடும்பத்தில் இருந்த நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, குடும்ப உறுப்பினர்களுடனான பிணைப்பு மேம்படும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் இணக்கம் அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் நுழைந்து கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்கியிருப்பதால், இந்த ராசிக்காரர்கள் பலமடங்கு நன்மைகளைப் பெறுவார்கள். அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றியுடன், நிதி நன்மைகளையும் பெறக்கூடும்.
வாழ்க்கையில் இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குவீர்கள். இதனால் நிதி நிலையில் உள்ள முன்னேற்றம் ஏற்படும். பங்குச் சந்தையில் முதலீடுகளை செய்தால், நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
