Latest Updates
-
கல்யாண வீட்டு பூரி மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 11 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு வீண் செலவுகள் தேடிவரப்போகுதாம் - ஜாக்கிரதை -
Navaratri 2026: இந்த நவராத்திரியில் ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா உருளைக்கிழங்கோட சேர்த்து இந்த மாதிரி குருமா பண்ணுங்க - ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும் -
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க..
அக்டோபர் 19-ல் சொந்த ராசியில் அஸ்தமனமாகும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், பணம் பெருகும்..
Venus Combust In Libra 2026: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன் தற்போது தனது சொந்த ராசியான துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த சுக்கிரன் அக்டோபர் 19 ஆம் தேதி தனது சொந்த ராசியான துலாம் ராசியில் அஸ்தமனமடையவுள்ளார்.

சுக்கிரனின் இந்த நிலை மாற்றத்தின் தாக்கம் தொழில், நிதி நிலை, திருமண வாழ்க்கை போன்றவற்றில் காணப்படும். அதுவும் இதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு மோசமாகவும், சிலருக்கு அதிர்ஷ்டமாகவும் இருக்கும்.
இந்த அஸ்தமன நிலையில் சுக்கிரன் சுமார் 10 நாட்கள் வரை இருந்து, அக்டோபர் 29 ஆம் தேதி துலாம் ராசியில் உதயமாகி வலுவடையவுள்ளார். இப்போது சுக்கிரன் அஸ்தமனமாவதால் எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 2 ஆவது வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்களோ அல்லது புதிய திட்டங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்புக்களோ கிடைக்கலாம். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் உருவாவதற்கான வாய்ப்புள்ளது. சிக்கிய பணம் கைக்கு கிடைக்கும். ஆனால் அவசரமாக எந்த முதலீடுகளையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
மேஷம்
மேஷ ராசியின் 7 ஆவது வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் முயற்சித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் இக்காலத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். இருந்தாலும் எந்த ஒரு நிதி முடிவுகளையும் கவனமாக எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அவசரம் இழப்புகளை ஏற்படுத்தும்.
கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி மற்றும் தொழில் விஷயங்களில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 9 ஆவது வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றுறும் நிதி ரீதியாக நன்றாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. சுக்கிரனின் நிலையால் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படலாம். இருந்தாலும் செலவுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications




