Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
50 ஆண்டுகளுக்கு பின் சிம்மத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுது..
Trigrahi Yoga In Leo 2025: வேத ஜோதிடத்தில் கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, திரிகிரக யோகம் மற்றும் சதுர்கிரக யோகம் போன்ற பல்வேறு யோகங்களை அவ்வப்போது உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் மனித வாழ்க்கையில் மட்டுமின்றி, பூமியிலும் ஆழமாக தெரியும்.
அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியனும், புத்திகாரகனான புதனும் சிம்ம ராசியில் ஒன்றிணைந்து பயணிப்பார்கள். அதனால் அவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகும். அதே சமயம் மனதின் காரணியாக கருதப்படும் சந்திரனும் சிம்ம ராசியில் நுழையவுள்ளார். இதனால் சிம்ம ராசியில் சூரியன், புதன் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.

இந்த திரிகிரக யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படப் போகிறது. மேலும் சிக்கிய பணம் கைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இப்போது சிம்ம ராசியில் உருவாகும் திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் பெரிய அளவில் லாபத்தைப் பெறுவார்கள். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புக்கள் சாதகமாக வரும். வாழ்க்கையில் புதிய சாதனைகளைப் புரிவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். தலைமைத்துவ திறனும், முடிவெடுக்கும் ஆற்றலும் மேம்படும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் இலக்குகளை அடைவீர்கள்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். காதல் உறவுகள் மேம்படும். நிதி நிலை நன்றாக இருக்கும். முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். புதுமண தம்பதிகள் குழந்தை பாக்கியத்தைப் பெறும் வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். சிக்கிய பணம் கைக்கு கிடைக்கலாம். நிதி நிலைமை மேம்படும். பேச்சால் பல வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு வலுவாக இருக்கும். இதன் மூலம் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை பெறும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications