Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
திரிகிரக யோகம் மகர ராசியில் உருவாகுவதால் இந்த 5 ராசிக்காரரர்களுக்கு நஷ்டமும், ஆபத்துகளும் தேடிவரப்போகுதாம்...!
கிரகங்கள் தொடர்ந்து நகரும் போது அவை சில சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகிறது, ஆனால் அனைத்து ராஜயோகங்களும் நேர்மறையான பலன்களை மட்டுமே உருவாக்கும் என்று கூறமுடியாது. சில ராஜயோகங்கள் உருவாகும் போது அது சில ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்களை ஏற்படுத்தும். சுப கிரகங்கள் இணைந்து ஒரு ராஜயோகத்தை உருவாக்கினாலும், சில சமயங்களில் எதிர்மறையான பலன்களைத் தருகிறது. இதன் விளைவாக குறிப்பிட்ட ராசிக்காரர்கள் நிதிச் சுமை, குடும்பச் சிக்கல்கள் மற்றும் வியாபாரத்தில் நஷ்டம் போன்றவை ஏற்படலாம்.
தற்போது மகர ராசியில் சுக்கிரன், புதன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் ஒன்றாக சஞ்சரித்து திரிகிரக யோகம் உருவாகிறது. இது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு சவால்களை உருவாக்குகிறது. இந்த யோகம் அவர்களுக்கு பல வழிகளில் எதிர்பாராத ஆபத்துகளை ஏற்படுத்தப்போகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் திரிகிரக யோகத்தால் நெருக்கடிகளை சந்திக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு, திரிகிரக யோகம் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும். இந்த யோகம் அவர்கள் வாழ்க்கையில் அனைத்து வகையான பிரச்சனைகளைகளுக்கு தொடக்கப் புள்ளியாக இருக்கும். இந்த காலகட்டத்தில் அவர்கள் வியாபாரத்தில் பெரிய நஷ்டங்களை சந்திக்கலாம். இது தொழில் வாழ்க்கை மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் அமைதியின்மையை ஏற்படுத்தும் காலகட்டமாக இருக்கும். ஆனால் 2026-ன் தொடக்கத்தில் அவர்களின் நிலை மேம்பட்டு வாழ்க்கையில் அமைதி திரும்பும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இது நிதிரீதியாக மிகவும் மோசமான காலகட்டமாக இருக்கும். அவர்களின் திருமண வாழ்க்கையில் நெருக்கடிகளும், மகிழ்ச்சியின்மையும் நிறைந்திருக்கும். அவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பினால், இது அதற்கு சாதகமான நேரம் அல்ல. அதுமட்டுமின்றி, உடல்நலப் பிரச்சினைகள் மிகவும் தீவிரமாக மாறக்கூடும, இதனால் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் வேலையை சுமூகமாக செய்ய அவர்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும், ஏனெனில் அலுவலகத்தில் அவர்களுக்கு எதிரான சூழல் நிலவும்.
துலாம்
திரிகிரக யோகத்தால் துலாம் ராசிக்காரர்கள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கப் போகிறார்கள். இந்த காலகட்டத்தில் அவர்கள் பல்வேறு ஆரோக்கியப் பிரச்சினைகளை சந்திக்கப் போகிறார்கள். அதிர்ஷ்டவசமாக அவர்களின் அனைத்து உடல்நல பிரச்சனைகளும் மிக விரைவாக தீர்க்கப்படும். வேலையால் ஏற்படும் பணிச்சுமையும், மனஅழுத்தமும் இருமடங்காக அதிகரிக்கும். மேலும் இந்த காலகட்டத்தில் நிதிரீதியாக பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அனைத்து பிரச்சினைகளையும் முடிவுக்கு கொண்டுவர பொறுமையாக காத்திருக்க வேண்டும். இல்லையெனில், அது சூழலை மேலும் மோசமாக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு திரிகிரக யோகம் மிகப்பெரிய சவால்களை உருவாக்கப்போகிறது. இந்த யோகத்தால் அவர்கள் பல்வேறு நிதி சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும். அவர்களின் ஆரோக்கியம் இப்போது பெரிய சிக்கலாக மாறும். இந்த காலகட்டத்தில் பொறுமையை கடைபிடிக்க வேண்டியது அவசியம். உங்கள் திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் இருக்கும். முக்கியமான முடிவுகளை எடுக்க இது நல்ல நேரம் அல்ல. எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன் தீர ஆலோசிப்பது நல்லது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்காது. காதலர்களுக்கு இது மோசமான காலகட்டமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் சில ஆரோக்கியப் பிரச்சினைகள் அவர்களின் பாக்கெட்டை பதம் பார்க்கும். பெரும்பாலும் அவர்கள் செய்யும் அனைத்து விஷயங்களிலும் எதிர்பாராத தடைகள் ஏற்படும். முக்கிய விஷயம் என்னவென்றால், இது நிதிரீதியாக நல்ல நேரம் அல்ல. கடன் வாங்கும்போதும் நிதி விஷயங்களைக் கையாளும்போதும் மிகவும் கவனமாக இருங்கள். நீங்கள் ஒவ்வொரு அடியையும் எச்சரிக்கையுடன் முன்னெடுக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
