Latest Updates
-
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்..
கடக ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: ஜூலை 16 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் பெருகப்போகுது...
Trigrahi Yog In Cancer On July 2024: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது சுப யோகங்களையும் உருவாக்குகின்றன. அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும்.
அந்த வகையில் ஜூன் 29 ஆம் தேதி கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் கடக ராசிக்குள் நுழைந்தார். அதைத் தொடர்ந்து ஜூலை 07 ஆம் தேதி அசுரர்களின் தலைவனாக கருதப்படும் சுக்கிரன் கடக ராசிக்குள் நுழைந்தார். இந்நிலையில் ஜூலை 16 ஆம் தேதி கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் கடக ராசிக்குள் நுழையவுள்ளார்.

இதனால் ஜூலை 16 முதல் இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் கடக ராசியில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது மிகவும் மங்களகரகமான யோகமாகும். இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. முக்கியமாக நிதி நிலையில் உயர்வு ஏற்படவுள்ளது. இப்போது கடக ராசியில் உருவாகும் திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பல புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்து வருபவர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். குறிப்பாக நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் நிறைய பணத்தை சேமிக்க முடியும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சம்பள உயர்வைப் பெறலாம். உங்களின் வேலை நல்ல பாராட்டைப் பெறும். தொழில் ரீதியாக இக்காலம் அற்புதமாக இருக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தந்தையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி ரீதியாக வலுவாக இருப்பீர்கள். உங்களால் நிறைய பணத்தை சேமிக்க முடியும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி நன்மைகளைத் தருவதாக இருக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
