Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்களாம்...!
Trigraha Yoga 2025: ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கின்றன. கிரகங்கள் ஒன்றோடொன்று இணையும் போது சில சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன. இந்த யோகங்கள் அனைத்து ராசிக்காரர்களின் மீதும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
ஜூன் மாதத்தில் மூன்று கிரகங்கள் மிதுன ராசியில் இணையப் போகின்றன, இதன் விளைவாக சக்தி வாய்ந்த திரிகிரஹ யோகம் உருவாகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தை தரப்போகிறது மற்றும் அவர்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றப்போகிறது, மேலும் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அவர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

திரிகிரக யோகம்
ஜூன் 06, 2025 அன்று, புதன் மிதுன ராசியில் காலை 9:15 மணிக்கு சஞ்சரிக்கிறார். மேலும், சூரியன் ஜூன் 15, 2025 அன்று காலை 6:25 மணிக்கு மிதுன ராசியில் நுழைகிறார். குருபகவான் ஏற்கனவே மிதுன ராசியில் இருக்கிறார். இதனால், மூன்று கிரகங்களின் சேர்க்கை மிதுன ராசியில் திரிகிரக யோகத்தை உருவாக்குகிறது. சூரியன், குரு மற்றும் புதன் மிதுன ராசியில் ஒன்றாக வருவதால், இது ஒரு சில அதிர்ஷ்ட ராசிகளின் அதிர்ஷ்டத்தை பலப்படுத்துகிறது. அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு திரிகிரக யோகம் சிறப்பான பலன்களை அளிக்கப்போகிறது. ரிஷப ராசியின் இரண்டாம் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகுவதால், அவர்கள் தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை அடைவார்கள் மற்றும் அலுவலகத்தில் அவர்களின் நற்பெயர் அதிகரிக்கும். சரியான முதலீடுகள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் அவர்களின் நிதி வலுவடையும்.
நீண்டகாலமாக தடைப்பட்டிருந்த வேலைகள் இப்போது மீண்டும் தொடங்கப்பட்டு சரியான காலக்கெடுவிற்குள் முடிக்கப்படலாம். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் பெரிய லாபத்தை எதிர்பார்க்கலாம், மேலும் அவர்கள் தங்கள் வியாபாரத்தை விரிவாக்கலாம். இதனால் அவர்களின் வருமானத்திற்கான வழிகள் அதிகரிக்கும். அவர்களின் ஆரோக்கியம் இப்போது சிறப்பாக இருக்கும், இதனால் பல வேலைகளில் உற்சாகமாக பங்கேற்பார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு திரிகிரக யோகம் சாதகமான மாற்றங்களை வழங்கப்போகிறது. திரிகிரக யோகம் கன்னி ராசியின் கர்ம ஸ்தானத்தில் உருவாகுவதால் அவர்கள் வேலையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது, அதேசமயம் வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் நல்ல முன்னேற்றத்தை அடையலாம். வேலையில்லாதவர்களுக்கு இந்த காலகட்டத்தில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
வாகனங்கள் அல்லது அசையாச் சொத்துக்களால் எதிர்பார்த்த ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் நிம்மதி அதிகரிக்கும். வியாபாரிகள் இந்த யோகத்தால் பெரிய லாபத்தை சம்பாதிக்கலாம். புத்திசாலித்தனமான பேச்சுவார்த்தைகள் மூலம் அவர்கள் ஒரு புதிய ஒப்பந்தத்தை இறுதி செய்யலாம். மேலும் குடும்பத்தினருடனான உறவு மிகவும் வலுவடைகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் எந்த பெரிய உடல்நலப் பிரச்சினையையும் சந்திக்க மாட்டார்கள்.
மீனம்
திரிகிரக யோகம் மீன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நம்ப முடியாத மாற்றங்களை அளிக்கிறது. இந்த யோகம் அவர்கள் ராசியின் நான்காவது வீட்டில் உருவாகிறது. அவர்களின் அனைத்து முயற்சிகளும் இப்பொது வெற்றியைக் கொடுக்கும். எனவே இந்த நேரத்தில் அவர்களின் வாழ்க்கைத்தரமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும் மற்றும் அவர்களின் திறமையை நிரூபிக்க வாய்ப்புகள் தேடிவரும். சமூகத்தில் அவர்களின் நற்பெயரும், மரியாதையும் அதிகரிக்கும்.
இந்த நேரத்தில் அவர்கள் புதிய வாகனம் அல்லது சொத்து வாங்குவது பற்றி சிந்திக்கலாம். மேலும் அவர்களின் குடும்பத்தினருடனான உறவு வலுவடையும். திருமண வாழ்க்கையில், அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். திருமணமானவர்கள் இந்த காலகட்டத்தில் மகிழ்ச்சியாக இருக்கலாம் மற்றும் கடந்த கால பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












