Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
30 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு திடீர் பண ஆதாயமும், முன்னேற்றமும் ஏற்படும்..
Trigraha Yog In Aquarius 2025: வேத ஜோதிடத்தின் படி, 2025 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் சற்று சிறப்பானது. ஏனெனில் இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதோடு, பல யோகங்களும் உருவாகவுள்ளன. இதனால் பிப்ரவரி மாதத்தில் பல ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை காணவுள்ளனர்.
அந்த வகையில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், புத்திசாலித்தனத்தின் காரணியான புதன் மற்றும் கர்மத்தை அளிப்பவரான சனி பகவான் ஆகியோர் கும்ப ராசியில் ஒன்றிணைந்து பயணித்து திரிகிரக யோகத்தை உருவாக்கவுள்ளனர். இந்த யோகமானது சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது.

இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களின் செல்வாக்கு அதிகரித்து, நிதி நிலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளது. இப்போது 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசியில் உருவாகும் திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படவுள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
சனி, சூரியன் மற்றும் புதனின் ஆசியால் நிதி நிலை வலுவடையும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு திரிகிரக யோகமானது 9 ஆவது வீட்டில் உருவாக போகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மன ஆரோக்கியம் மேம்படும். அரசு வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மற்றும் பணியிடத்தில் மதிப்பும், மரியதையும் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள்.
தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலை செய்பவர்களுக்கு சில நல்ல செய்திகள் கிடைக்கும். வணிகர்களும் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்த யோக காலத்தில் எந்த முயற்சியை மேற்கொண்டாலும் வெற்றி கிடைக்கும். நிதி நிலை மேம்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். முதலீடு செய்யும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் செய்தால் எதிர்பாராத லாபத்தைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications