Latest Updates
-
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
100 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிஆதித்ய யோகம்: இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது..
Triaditya Yog In Gemini 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாக்கும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அந்த வகையில் கிரகங்களின் நிலைகளால் மிதுன ராசியில் திரிஆதித்ய யோகம் உருவாகவுள்ளது. இந்த திரிஆதித்ய யோகமானது சந்திரன், சூரியன், குரு மற்றும் புதன் ஆகிய கிரகங்களால் உருவாகிறது. அதுவும் இந்த யோகமானது 3 ராஜயோகங்கள் ஒரே வேளையில் நிகழ்வதால் உருவாகிறது. அதில் ஏற்கனவே சூரியன் மிதுன ராசியில் பயணித்து வருகிறார்.

புதன் ஜூன் 22 வரை மிதுன ராசியில் இருப்பார். இதனால் மிதுன ராசியில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. அத்துடன் குரு பகவானும் மிதுன ராசியில் இருப்பதால், குரு சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்நிலையில் ஜூன் 24 ஆம் தேதி சந்திரனும் மிதுன ராசிக்கு செல்வதால், சந்திரன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் சஷி ஆதித்ய யோகம் உருவாகவுள்ளது.
இப்படி ஒரே வேளையில் 3 ஆதித்ய யோகங்கள் மிதுன ராசியில் உருவாகிறது. இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக, நிதி நன்மைகளைத் தருவதாக, வெற்றிகளை வழங்குவதாக இருக்கப் போகிறது. இப்போது திரிஆதித்ய யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் 7 ஆவது வீட்டில் இந்த ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இதன் மூலம் வேலைகள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக முடிவடையும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் பலவிதமான நன்மைகளைப் பெறக்கூடும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் உங்களின் வேலை எளிதில் முடிவடையும்.
மீனம்
மீன ராசியின் 4 ஆவது வீட்டில் திரிஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த யோக காலம் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புள்ளது. புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். உறவினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் திரிஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இக்காலத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதயும் அதிகரிக்கும். எந்த வேலையை செய்தாலும் , அதில் நல்ல வெற்றி கிடைக்கும். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும். அலுவலகத்தில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications