Latest Updates
-
இதுல ஒரு புறாவை தேர்ந்தெடுங்க.. அடுத்த 3 நாட்களில் உங்களுக்கு என்ன நடக்கும்-ன்னு சொல்றோம்.. -
மாங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
உலகின் டாப் 10 பணக்கார குட்டி நாடுகள் என்னென்ன தெரியுமா? இந்த நாடுகளில் சில ஆயிரம் பேரே வாழ்கிறார்களாம் -
இந்த 4 ராசிக்காரங்க எல்லோருக்கும் பிரச்சினைகளை கொடுப்பதற்காகவே பிறந்த ஆபத்தான ஆன்மாக்களாம் -
2 மாம்பழமும் 6 பிரட்டும் இருந்தா.. ஸ்கூல் விட்டு வர பிள்ளைகளுக்கு 10 நிமிஷத்துல இந்த ஸ்வீட் செஞ்சு குடுங்க... -
International Yoga Day 2026: சர்வதேச யோகா தினத்தின் வரலாறு என்ன தெரியுமா? இந்த வருட யோகா தினத்தின் சிறப்பு என் -
சனி பகவான் நிலையால் இனி 2027 வரை இந்த 3 ராசிக்காரங்க நல்ல வளர்ச்சியை காண்பார்களாம்! -
ஆந்திரா மெஸ் ஸ்டைல் கோவைக்காய் துவையல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க
இந்த 5 ராசி ஜோடிகள் கல்யாணம் பண்ணுனா.. அவங்க திருமண வாழ்க்கை நரகமா இருக்குமாம்...
Worst Zodiac Pairs For Marriage: ஜோதிடத்தின் படி, ஒருவரது ராசியைக் கொண்டு அந்நபரின் உண்மையான குணாதிசயங்களை கணித்து கூற முடியும். அதுவும் ஒருவர் அன்பானவரா, வெளிப்படையாக பேசுபவரா அல்லது மனதிற்குள்ளேயே வைத்துக் கொள்பவரா என்பது முதல் அவர்கள் மற்றவர்களுடன் எப்படி பழகுவார்கள், எந்த ராசிக்காரர்களுடன் இவர்களுக்கு செட் ஆகும் என்பது வரை பலவற்றை தெரிந்து கொள்ளலாம் என்று ஜோதிடம் கூறுகிறது.
அதில் சில ராசிக்கார ஜோடிகள் சிறந்த தம்பதிகளாக இருப்பர். அதே வேளையில் சில ராசியைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேரும் போது வாழ்க்கை மிகவும் மோசமாக இருக்கும். இப்படி பொருத்தமில்லாத ராசிக்காரர்கள் திருமணம் செய்து கொண்டால், அந்த திருமண வாழ்க்கை நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்காது மற்றும் திருமண வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக, நரக வாழ்க்கையை வாழ்ந்து வருவார்கள். இப்போது அப்படிப்பட்ட சில மோசமான ஜோடி ராசிக்காரர்களைக் காண்போம்.

1. மேஷம் மற்றும் கடகம்
மேஷம் என்பது ஒரு நெருப்பு ராசி. அதே சமயம் கடகம் ஒரு நீர் ராசி. நீரும், நெருப்பும் எதிரெதிர். எனவே இவ்விரு ராசிக்காரர்களுக்கும் எப்போதும் பொருந்தாது. அதுவும் கடக ராசிக்காரர்கள் மிகவும் சென்சிடிவ்வானவர்கள். அதே சமயம் மேஷ ராசிக்காரர்கள் துடிப்பானவர்கள் மற்றும் வெளிப்படையாக பேசுபவர்கள். எனவே மேஷ ராசிக்காரர்கள் பேச்சால் கடக ராசிக்காரர்கள் எளிதில் உணர்ச்சிகளைப் புண்படுத்துவார்கள். இதன் மூலம் இவர்கள் இருவருக்கும் நிறைய பிரச்சனைகள் வரக்கூடும். எனவே இந்த இரண்டு ராசிக்காரர்களும் திருமணம் செய்து கொண்டால், பிரச்சனையே வாழ்க்கையாகிவிடும்.
2. மீனம் மற்றும் தனுசு
மீனம் ஒரு நீர் ராசி மற்றும் தனுசு ஒரு நெருப்பு ராசி. மேலும் இவ்விரு ராசிக்காரர்களின் குணாதிசயங்களும், சிந்திக்கும் திறனும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். தனுசு ராசிக்காரர்கள் வெளிப்படையாக பேசுவார்கள், துடிப்பானவர்கள் மற்றும் சாகச விரும்பிகள். அதே சமயம் மீன ராசிக்காரர்கள் மிகவும் சென்சிடிவ்வான நபர் மற்றும் மிகவும் அன்பானவர்கள். எனவே தனுசு ராசிக்காரர்கள் மீன ராசிக்காரர்களை திருமணம் செய்து கொண்டால் வெளிப்படையான பேச்சினால், அறியாமலேயே அதிகம் மனதை காயப்படுக்கூடும். இதனால் திருமண வாழ்க்கையானது சந்தோஷமில்லாமல் மோசமாக இருக்கும்.
3. மிதுனம் மற்றும் விருச்சிகம்
மிதுன ராசிக்கும், விருச்சிக ராசிக்கும் எப்போதும் செட் ஆகாது. ஏனெனில் மிதுன ராசிக்காரர்கள் விளையாட்டுத்தனமானவர்கள், எதையும் ஈஸியாக எடுத்துக் கொள்ளக்கூடியவர்கள். அதே சமயம் விருச்சிக ராசிக்காரர்கள் தீவிரமானவர்கள் மற்றும் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். எனவே இவ்விரு ராசிக்காரர்களும் ஒன்று சேர்ந்தால், இவர்களுக்கு இடையேயான உறவு நீடித்திருப்பது என்பது கடினம். ஒருவேளை இவர்கள் திருமணம் செய்து கொண்டால் பல சவால்களை சந்திக்க நேரிடும். வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருக்கும். இவர்களின் திருமண வாழ்க்கை வெற்றிகரமாக இருக்க வேண்டுமானால், நிறைய பொறுமையும், புரிதலும் தேவைப்படும்.
4. மகரம் மற்றும் சிம்மம்
மகர ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள், ஒழுக்கமானவர்கள் மற்றும் நிதானமானவர்கள். அதே சமயம் சிம்ம ராசிக்காரர்கள் அதிகமாக பேசுவார்கள், நட்பானவர்கள், பெருமை நிறைந்தவர்கள். மேலும் எங்கும் அனைவரது கவனத்தின் மையமாக இருக்க விரும்புவார்கள். இவ்விரு ராசிக்காரர்களின் முரண்பாடான ஆளுமை காரணமாக, இவர்கள் இருவரும் திருமண வாழ்க்கையில் இணைந்தால், அவர்களின் வாழ்க்கை நரகமாக இருக்கும்.
5. ரிஷபம் மற்றும் கும்பம்
ரிஷபம் மற்றும் கும்ப ராசிக்காரர்களின் எண்ணங்களும், குணாதிசயங்களும் முற்றிலும் மாறுபட்டிருக்கும். அதில் ரிஷப ராசிக்காரர்கள் வழக்கம், ஆறுதல் மற்றும் நிலைத்தன்மையை விரும்புவார்கள். அதே வேளையில் கும்ப ராசிக்காரர்கள் மாற்றங்களை விரும்புவார்கள் மற்றும் குழப்பத்திலும் சிறப்பாக செயல்படுவார்கள். மேலும் கும்ப ராசிக்காரர்கள் படைப்பாற்றல் கொண்டவர்கள் மற்றும் சுதந்திரமாக செயல்பட விரும்புவார்கள். இப்படியான இவ்விரு ராசிக்காரர்களின் குணாதிசயங்கள், இவர்களின் திருமண வாழ்க்கையை கடினமாக்கும். அதில் ரிஷப ராசிக்காரர்கள் கும்ப ராசிக்காரர்களை நம்பகத்தன்மையற்றவர்களாக நினைக்கலாம், கும்ப ராசிக்காரர்கள் ரிஷபம் மிகவும் பிடிவாதமானவராக நினைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications