Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
இந்த 4 ராசிக்காரங்க உலகத்தை சுற்றுவதற்காகவே பிறந்தவர்களாம்... ரெக்கை இல்லனாலும் இவங்க பறவைதான்...!
இந்த உலகம் நாம் நினைத்து பார்ப்பதை விட மிகவும் அழகானது மற்றும் பெரியது. ஆனால் அதனை நாம் முழுமையாக ரசிக்கிறோமா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூற வேண்டும். நம்முடைய வேலை, பொருளாதார நிலை, குடும்பச் சூழல் என பல்வேறு காரணங்களால் நமக்கு ஆசை இருந்தாலும் நம்மால் நாம் ஆசைப்படும் இடங்களுக்கு போக முடிவதில்லை.
யாருமே தெரியாத இடத்திற்கு சென்று, அங்குள்ள கலாச்சாரத்தையும், கண்கவர் இடங்களையும் பார்க்க வேண்டும் சிலிர்ப்பூட்டும் சாகசங்களில் ஈடுபட வேண்டும் என்பது அனைவருக்கும் இருக்கும் ஆசையாக இருக்கும். ஆனால் வெகுசிலர் மட்டுமே இந்த ஆசையை தங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றிக் கொள்பவர்களாக இருப்பார்கள்.

இந்த அதிர்ஷ்டத்துக்கு காரணம் அவர்களின் பிறந்த ராசியாக இருக்கலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஜோதிடத்தின் படி குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்கள் உலகை ஆராயும், சுற்றிப்பார்க்கும் ஆர்வமும், அதிர்ஷ்டமும் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தங்கள் சுதந்திரத்தையும், புதிய இடங்களை ஆராய்வதையும் மதிக்கிறார்கள். முன்னேற்றம் மற்றும் கண்டுபிடிப்பின் கிரகமான குருபகவானால் தனுசு ராசி ஆளப்படுகிறது, இது அவர்களை இயற்கையாகவே சாகசக்காரர்களாக மாற்றுகிறது. தங்களுக்கு தெரியாத விஷயங்களை ஆராய்வதையும், புதுமையான அனுபவங்களைத் தேடுவதையும், பல்வேறு கலாச்சாரங்களை பற்றித் தெரிந்து கொள்வதையும் அவர்கள் விரும்புகிறார்கள்.
அவர்கள் தங்கள் ஆர்வத்திற்கு தீனி போடவும், தங்கள் உற்சாகமான மற்றும் துணிச்சலான இயல்பின் காரணமாக தங்கள் எல்லைகளை விரிவுபடுத்தவும் தொலைதூர இடங்களுக்கு அடிக்கடி பயணம் செய்கிறார்கள். உலகில் பாதியையாவது சுற்றிப் பார்க்காமல் அவர்கள் ஓய மாட்டார்கள்.
மிதுனம்
வணிகம் மற்றும் தகவல் தொடர்பின் கிரகமான புதன் மிதுன ராசியை ஆள்கிறது. அவர்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும், ஆராயவும் எப்போதும் தயாராக இருக்கும் அமைதியற்ற ஆன்மாவாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில் சுவாரஸ்யம் மற்றும் மாற்றத்தை விரும்புகிறார்கள், இது அவர்களை உற்சாகமான பயணிகளாக மாற்றுகிறது.
அவர்கள் எங்கு சென்றாலும் புதிய அனுபவங்களை பெற தயாராக இருப்பார்கள், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்களுடன் தொடர்பு கொள்கிறார்கள். அவர்களின் தங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை பயணங்களுக்காகவே ஒதுக்கி விடுவார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் அசாதாரண ஆர்வம் கொண்டவர்கள் மற்றும் சுதந்திர ஆன்மாக்கள். கும்ப ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையை சுவாரஸ்யமாக அனுபவிக்கும் தனித்துவமான மக்கள். அவர்கள் தங்கள் தனித்துவமான ஆளுமையையும், ஆசைகளையும் வெளிப்படுத்த அனுமதிக்கும் விசித்திரமான மற்றும் தனித்துவமான பயண அனுபவங்களால் ஈர்க்கப்படுகிறார்கள்.
கும்ப ராசிக்காரர்கள் பெரும்பாலும் சமூக உணர்வுள்ள மற்றும் சாகசங்கள் நிறைந்த இடங்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்த இடங்கள் அவர்களின் ஆசைகளையும், தேவையையும் பூர்த்தி செய்வதாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் கற்பனைத் திறனும், படைப்பாற்றலும் கொண்டவர்கள் மற்றும் அவர்கள் தங்களுடைய கற்பனை உலகங்களில் தொலைந்து போகிறார்கள், ஏனெனில் அங்குதான் அவர்களின் கனவுகள் நிறைவேறும். மீன ராசிக்காரர்கள் உணர்திறன் மிக்கவர்கள், மிகவும் கற்பனைத் திறன் கொண்டவர்கள், அவர்கள் தங்கள் உணர்வுகளைத் தூண்டும் மற்றும் அவர்களின் படைப்பாற்றலைத் தூண்டும் இடங்களை பார்க்க மிகவும் ஆசைப்படுவார்கள்.
அவர்கள் அன்றாட வாழ்க்கையின் மன அழுத்தத்திலிருந்து தப்பித்து, தங்கள் மனதிற்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தரும் இடங்களுக்கு அடிக்கடி செல்வார்கள். அவர்களுக்கு மனஅமைதியைக் கொடுக்கும் இடம் உலகில் எங்கு இருந்தாலு அங்கு அவர்கள் செல்வார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
