Latest Updates
-
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 31 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கடன் தொல்லை நீங்கி பண வரவு அதிகரிக்கும்! -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் கோதுமை ரவா பாசிப்பருப்பு பாயாசம் - எப்படி செய்யணும் தெரியுமா? -
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்..
இந்த 4 ராசிக்காரர்களால் தோல்வியை ஒப்புக்கொள்ளவே முடியாதாம்... இவங்க ரொம்ப பலவீனமானவங்களாம்... உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் அவர்களுக்கென தனித்துவமான குணாதிசயங்களும், பண்புகளும் இருக்கும். ஒருவரின் பிறந்த ராசி அவர்கள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் வெற்றி மற்றும் தோல்விகளை எப்படி கையாளுகிறார்கள் என்பதை நிர்ணயிக்கிறது.
சில ராசிக்காரர்கள் தோல்விகள் மற்றும் பின்னடைவுகளை கருணையுடனும், தன்ணமபிக்கையுடனும் கையாண்டு அதிலிருந்து மீண்டு வரமுடியும் என்றாலும், சில ராசிக்காரர்கள் தோல்வியை ஏற்றுக்கொள்வதை மிகவும் கடினமானதாகவும், சவாலான தாகவும் கருதுகின்றனர். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் தோல்விகளைப் பார்த்து பயப்படுபவர்களாகவும், அதிலிருந்து ஓடுபவர்களாகவும் இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
ராசி சக்கரத்தின் முதல் ராசியான மேஷ ராசிக்காரர்கள், அவர்களின் கடுமையான போட்டித்தன்மை மற்றும் லட்சிய இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். அவர்களின் தீவிர ஆர்வத்தால் உந்தப்பட்டு, மேஷ ராசிக்காரர்கள் இயற்கையாகவே தலைமைப்பண்பு கொண்டவர்களாக இருப்பார்கள், அவர்கள் எப்போதும் ஆதிக்கம் செலுத்தவும், அதிகாரமிக்க பதவியில் இருக்கவும் விரும்புகிறார்கள்.
இதன் விளைவாக, தோல்வியை ஏற்றுக்கொள்வது என்பது அவர்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும், ஏனெனில் அது அவர்களின் அதிகார உணர்வு மற்றும் தலைமைத்துவத்தை கேள்விக்குறியாக்குகிறது. தோல்வி பயம் மற்றும் தங்களை நிரூபிக்க வேண்டும் என்ற விருப்பம் அவர்களை தோல்விகளை கையாளுவதை கடினமாக்கும்.
சிம்மம்
சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள், எப்போதும் அங்கீகாரத்தையும், பாராட்டையும் விரும்பும் ஒரு ராசியாகும். அவர்கள் இயற்கையாகவே மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அதிகம் முயற்சி செய்வார்கள்.
தோல்வியை எதிர்கொள்ளும்போது, சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் சுயமரியாதைக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டதாக கருதுகிறார்கள், தோல்விகள் அவர்களின் மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்தும். அவர்களின் ஈகோ தோல்வியை ஏற்றுக்கொள்வதை அவர்களுக்கு கடினமாக்கலாம், ஏனெனில் அது அவர்களின் மகத்துவத்தைக் குறைக்கும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள்.
விருச்சிகம்
மர்மம் மற்றும் மாற்றத்தின் கிரகமான புளூட்டோவால் ஆளப்படும் விருச்சிக ராசிக்காரர்கள், அவர்களின் தீவிரம் மற்றும் மன உறுதிக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் பெரும்பாலும் அவர்கள் நோக்கி வரும் சவால்களை அவசியம் ஜெயிக்க வேண்டிய போர்களாகக் கருதுகிறார்கள், எனவே தோல்வியை ஜீரணிப்பது அவர்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும். அதிகாரம் மீதான அவர்களின் ஆசை மற்றும் தோல்வி குறித்த பயம், விரக்தி மற்றும் வெறுப்பு உணர்வுகளுக்கு வழிவகுக்கும்.
மகரம்
சனிபகவானால் ஆளப்படும் மகர ராசிக்காரர்கள், லட்சியம் மற்றும் வெற்றி மீதான பேராசையை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறார்கள். அவர்கள் மிகவும் ஒழுக்கமான மற்றும் அர்ப்பணிப்புள்ள நபர்கள், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அனைத்து விஷயங்களிலும் தங்களுக்கென உயர் தரங்களை அமைத்துக் கொள்கிறார்கள்.
தோல்வியை எதிர்கொள்ளும்போது, மகர ராசிக்காரர்கள் ஏமாற்றத்தையும் விரக்தியையும் உணரக்கூடும், ஏனெனில் இந்த தோல்விகளால் அவர்கள் தங்கள் சொந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவோ அல்லது மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவோ வாழ முடியாது என்று பயப்படுகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
