Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஆபத்தான எதிரியாக இருப்பார்களாம்... இவங்களவிட்டு விலகி இருக்கறதுதான் நல்லது...!
நாம் அனைவருமே நமக்கேத் தெரியாமல் யாராவது ஒருவருக்கு நிச்சயம் எதிரியாக இருப்போம். எதிரிகளே இல்லாத வாழ்க்கையில் எப்போதும் சுவாரஸ்யம் இருக்காது. அதேசமயம் ஆபத்தான எதிரிகள் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் நிம்மதியே இருக்காது. அனைவரும் ஆபத்தான எதிரிகளாக இல்லாவிட்டாலும் சிலர் மிகவும் மோசமான மற்றும் ஆபத்தான எதிரிகளாக இருப்பார்கள்.
ஜோதிடத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் ஆபத்தான எதிரிகளாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் யார் முன்னும் மண்டியிட மாட்டார்கள். இவர்களுடன் போட்டியிடுவதோ அல்லது இவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதோ உங்களை நீங்களே ஆபத்தில் தள்ளி கொள்வது போன்றது. எனவே அவர்களுடன் எந்தவித சச்சரவிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

அவர்கள் கிரிமினல்களாக இருக்க மாட்டார்கள் ஆனால் அவர்கள் உங்களை ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் மோசமான எதிரிகளாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
ராசி சக்கரத்தின் முதல் ரசியக இருக்கும் மேஷ ராசிக்காரர்கள் ஆபத்தான எதிரிகளில் முதலிடத்தில் இருக்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் இயல்பிலேயே அவர்களை ஆளும் கிரகமான செவ்வாய் கிரகத்தின் வன்முறை சக்தியைக் கொண்டுள்ளனர். மேஷ ராசிக்காரர்கள் மனதளவில் மிகவும் தீவிரமானவர்கள் மற்றும் மனஉறுதி கொண்டவர்கள். அவர்கள் தங்கள் அறிவு மற்றும் தகுதியை மீறி, வலிமையான போட்டியாளரைக் கூட தோற்கடிக்க முடியும் என்று அவர்கள் முடிவு செய்கிறார்கள்.
அவர்களிடம் உள்ள மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால், அவர்கள் ஆணவம் மற்றும் ஈகோ நிறைந்தவர்கள். அவர்கள் நல்ல நண்பர்கள், ஆனால் யாராவது அவர்களிடம் ஏதாவது ஒரு வகையில் தவறாக நடந்து கொண்டால், அவர்கள் அந்த நபரை எதிரியாகக் கருதி எல்லா வகையிலும் அவர்களுக்கு எதிராகத் திரும்புகிறார்கள். அவர்களை பேசி சமாதானப்படுத்துவது என்பது இயலாத காரியம். அவர்கள் யாருக்கும் தலைவணங்க விரும்புவதில்லை.
விருச்சிகம்
மேஷ ராசிக்காரர்களைப் போலவே விருச்சிக ராசிக்காரர்களும் கிரகங்களின் தளபதியான செவ்வாயால் ஆளப்படுகிறார்கள். எனவே அவர்கள் இயற்கையிலேயே வன்முறையாளர்களாக இருப்பார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் வெளித்தோற்றத்திற்கு பார்ப்பதற்கு அமைதியாகவும், நிதானமாகவும் தோன்றலாம், ஆனால் அவர்களின் மனதில் தீவிரமான உணர்ச்சிகளும், வன்மமும் நிறைந்திருக்கும்.
அவர்களுக்குள் இருக்கும் ஆபத்தான எதிரிகள் விழித்துக் கொள்ளும்போது அவர்கள் எதிரியாக கருதுபவர்களை பழிவாங்க இடைவிடாமல் முயற்சிப்பார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை நிம்மதியாக வாழ முயற்சிக்கிறார்கள். அதற்காக அவர்கள் தங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து எதிரிகளையும் அப்புறப்படுத்த முயற்சிக்கிறார்கள். அதற்காக அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் அனைத்து ராசிக்காரர்களையும் விட மிகவும் சிக்கலான ஆளுமை கொண்டவர்கள். நீங்கள் நிறைய கூச்சல்களையும், வாக்குவாதங்களையும் எதிர்கொள்ள விரும்பினால், மகர ராசிக்காரர்களிடம் ஏதாவது ஒரு சின்ன பிரச்சினை செய்தால் போதுமானது. இந்த ராசிக்காரர்கள் மிகவும் ஆக்ரோஷமான மனதைக் கொண்டுள்ளனர். இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையையும் சரியாகச் செய்வதில் நம்பிக்கை கொண்டவர்கள், மேலும், சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்கள் நடத்தையை மாற்றிக் கொள்வதிலும் சிறந்தவர்கள்.
அவர்கள் ஒவ்வொரு கடினமான சூழ்நிலையையும் மிகவும் உறுதியாக எதிர்கொள்கிறார்கள். ஒருவர் அவர்களிடம் ஏதேனும் பிரச்சினையில் ஈடுபட்டால், அவர்களை எளிதில் விட்டுவிட மாட்டார்கள். இவர்களுடன் பிரச்சினை வைத்துக் கொள்வது என்பது எந்தவொரு நபருக்கும் மிகவும் கடுமையானதாக இருக்கும். ஏனெனில் இவர்கள் எப்போது தாக்குவார்கள் என்று தெரியாது, ஆனால் அவர்கள் அதை செய்யும் போது அது நிச்சயம் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் சனிபகவானால் ஆளப்படுபவர்கள். அவர்கள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டவர்கள் மற்றும் நன்கு சிந்திக்கும் திறன் கொண்டவர்கள். இவர்கள் எல்லாவற்றையும் சரியாக செய்ய வேண்டுமென்று விரும்புகிறார்கள். எனவே இவர்கள் பெரும்பாலும் அதிகாரமிக்க பதவிகளில் காணப்படுகிறார்கள். எந்த வேலையையும் செய்ய கடின உழைப்பு தேவை என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். அவர்களின் துல்லியமான அணுகுமுறையும் சரியான முடிவுகளை எடுக்கும் சக்தியும் அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது.
கும்ப ராசிக்காரர்களைச் சுற்றியுள்ளவர்கள் அவர்களால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். யாராவது அவர்கள் வேலையில் தலையிட முயற்சித்தால் அல்லது அவர்களுடன் பகைமை கொள்ள முயன்றால், அவர்கள் தங்கள் எதிரிகளின் வாழ்க்கையை நரகமாக மாற்றுவார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
