Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப பிடிவாதக்காரர்களாம்... அவங்க தோல்விக்கு காரணமாக அதுதான் இருக்குமாம்..உங்க ராசி என்ன?
பிடிவாதம் என்பது அனைவருக்குள்ளும் இருக்கும் ஒரு குணமாகும். இந்த குணம் சில சமயங்களில் வரமாகவும், சில சமயங்களில் சாபமாகவும் இருக்கும். அது வரமாகவும், சாபமாகவும் இருப்பது சூழ்நிலையைப் பொறுத்து மாறுபடும். ஒருவர் தங்களின் பிடிவாதத்தை நேர்மறையாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறலாம், அதேசமயம் சிலர் தங்களின் பிடிவாதத்தாலேயே வாழ்க்கையில் தங்களின் அழிவை தேடிக்கொள்வார்கள்.
ஜோதிடத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் பிடிவாதக்காரர்களாக இருப்பார்கள். அவர்கள் எந்த சூழ்நிலையிலும், யாருக்காகவும் தங்களின் பிடிவாதத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இது சில சமயங்களில் அவர்களுக்கு நல்ல முடிவுகளையும், சில சமயங்களில் மோசமான பலன்களையும் கொடுக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் அவர்களின் பிடிவாதத்திற்கு பெயர் போனவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசி வலிமையான காளையால் சித்தரிக்கப்படுகிறது. வலிமையான மற்றும் பிடிவாதமான காளையின் இயல்பைப் போலவே, ரிஷப ராசிக்காரர்களும் இயல்பிலேயே வலிமையானவர்கள் மற்றும் பிடிவாதமானவர்கள். அவர்களின் பிடிவாதமான இயல்பு அவர்களை வாழ்க்கையில் பெரும்பாலும் பின்னுக்குத் தள்ளக்கூடும்.
அதேசமயம் ரிஷப ராசிக்காரர்களைப் பற்றிய நேர்மறையான பண்பு என்னவெனில், அவர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டால் அவர்கள் அதிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் இலக்குகளை பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டு தங்கள் கனவுகளை சாதிப்பார்கள். அவர்களின் பிடிவாதத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது அவர்களின் மனநிலையைப் பொறுத்தது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் நெகிழ்வானவர்கள் மற்றும் வெளிப்படையான குணம் கொண்டவர்கள், அவர்கள் முடிவெடுக்க முடியாதவர்களாக இருந்தாலும் அதிபுத்திசாலிகள், அதேசமயம் பிடிவாதமானவர்களும் கூட. அவர்கள் நினைப்பது சரியென்று முடிவெடுத்து விட்டால் அவர்கள் அதில் உறுதியாக இருப்பார்கள், அவர்களின் கருத்தை யாராலும் மாற்ற முடியாது.
அவர்கள் மிகவும் திறமையானவர்கள், மற்றவர்களை தங்கள் வழிகளை எப்படி ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டுமென்று அவர்கள் நன்கு அறிவார்கள். அவர்கள் தொடர்ந்து புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளத் தயாராக இருப்பார்கள், கற்றுக்கொள்வதில் கூட அவர்கள் பிடிவாதமானவர்களாக இருப்பார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் பிறவியிலேயே புத்திக்கூர்மை வாய்ந்தவர்கள், எப்போதும் அனைவரையும் வழிநடத்திச் செல்ல விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் புத்திக்கூர்மை மீது அசாத்திய நம்பிக்கைக் கொண்டுள்ளனர், எதையும் செய்வதற்கு முன் நன்றாக யோசித்து, ஒரு கருத்து உறுதியாகத் தெரிந்தவுடன், அதில் மிகவும் பிடிவாதமாக இருப்பார்கள்.
அவர்களின் பிடிவாதமான குணம் காரணமாக அவர்கள் அனைவரையும் தங்கள் கருத்துக்களை ஒப்புக்கொள்ள வலியுறுத்துவார்கள். அவர்கள் தங்களின் கருத்துக்களிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள், மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். இந்த பிடிவாதத்தால் அவர்கள் தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை தனிமையில் கழிக்க வேண்டியிருக்கும். அவர்களுக்கு நட்பு மற்றும் உறவுகளை விட அவர்களின் பிடிவாதம் முக்கியமானதாகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இயல்பிலேயே பிடிவாதக்காரர்கள். அவர்கள் அவர்களின் வயதை விட பல வருடங்கள் அதிக அனுபவம் உள்ளவர்கள் போல இருப்பார்கள். அவர்கள் கனவு காண்பவர்கள், சாதனையாளர்கள் மற்றும் விசித்திரமான குணம் கொண்டவர்கள். கும்ப ராசிக்காரர்கள் அனைவரிடமும் நட்பாக பழகக் கூடியவர்கள், ஆனால் அதற்காக உங்களின் விதிகள் மற்றும் கருத்துக்களை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நீங்கள் எதிர்பார்த்தால், நீங்கள் ஏமாந்து போவீர்கள்.
அவர்கள் மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அதேசமயம் தங்கள் கருத்தை மற்றவர்கள் மீது திணிக்கவும் மாட்டார்கள். அவர்கள் தங்கள் நம்பிக்கைகளில் உறுதியாக இருக்கிறார்கள், யார் என்ன நினைக்கிறார்கள் என்பதை ஒருபோதும் பொருட்படுத்த மாட்டார்கள், மற்றவர்களின் கருத்துக்களை கேட்க ஆர்வம் காட்டவும் மாட்டார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
