Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
இந்த 4 ராசிக்காரங்க இதயத்தில் துளியும் இரக்க உணர்வு இருக்காது..சில நேரங்களில் ரொம்ப கொடூரமா நடந்துப்பாங்களாம்!
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் சில தனித்துவமான குணங்கள் இருக்கும். சிலர் தங்களின் அன்பான குணத்தால் அனைவரின் மனதிலும் அன்பை விதைக்கும் அதே நேரத்தில் சில ராசிக்காரர்கள் தங்களின் கோபத்தாலும், இரக்கமற்ற குணத்தாலும் அனைவரின் மனதிலும் பயத்தை விதைப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களைப் போலவே சாதாரணமானவர்களாக இருந்தாலும் அவர்களின் எல்லைகள் மீறப்படும் போது அவர்கள் மிகவும் இரக்கமற்றவர்களாக மாறலாம்.
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் தங்களின் வார்த்தைகளாலும், தங்களின் செயல்களாலும் மற்றவர்களை காயப்படுத்துவார்கள். மற்றவர்கள் தங்கள் பேச்சை கேட்காத போதும், சூழல் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப இல்லாத போது அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் மிருகம் வெளியே வரலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் அவர்களின் இரக்கமற்ற குணத்தால் அனைவரையும் பயமுறுத்துபவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் அவர்களின் தீவிரத்திற்கு பெயர் பெற்றவர்கள், அவர்களுக்கு தவறிழைக்கப்படும் போது, அவர்கள் கோபப்பட மாட்டார்கள் மாறாக அவர்கள் பழிவாங்குவார்கள். அவர்களின் இரக்கமின்மை ஆழ்ந்த ஆர்வம் மற்றும் அதிகாரம் மீதான விருப்பத்திலிருந்து வருகிறது.
விருச்சிக ராசிக்காரர்கள் மன்னிக்கும் குணம் இல்லாதவர்களாகவும், உளவியல்ரீதியாக தாக்குவதில் கில்லாடிகளாகவும் இருக்கலாம். நீங்கள் அவர்களைக் காட்டிக் கொடுத்தால், அதற்கான பலனை நீங்கள் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க வேண்டியிருக்கும். அவர்கள் எளிதில் மறந்துவிடக் கூடியவர்கள் அல்ல, மேலும் அவர்களின் பழிவாங்கும் குணம் அவர்களை நீடித்த பாதிப்பை ஏற்படுத்தும் வழிகளில் செயல்படத் தூண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் வெளித்தோற்றத்திற்கு அமைதியாகவும், பொறுமையானவர்களாகவும் இருக்கலாம், ஆனால் அவர்களின் தோற்றத்தை பார்த்து ஏமாந்து விடக்கூடாது. அவர்களின் கோபம் எல்லை மீறும்போது அவள் மிகவும் ஆபத்தானவர்களாக மாறலாம். அவர்களின் இரக்கமின்மை உணர்வுரீதியான, திட்டமிட்டு பழிவாங்கும் திறனிலிருந்து வெளிப்படுகிறது. அவர்கள் தங்கள் இலக்குகளை அடைய மற்றவர்களை மிதிக்க ஒருபோதும் தயங்க மாட்டார்கள்.
அவர்களின் வெற்றிக்கு உதவியவர்களை கைவிடவும் அவர்கள் தயங்குவதில்லை, மேலும் வணிகம் அல்லது தனிப்பட்ட விஷயங்களில் அவர்கள் இரக்கமற்றவர்களாக இருக்கலாம். மகர ராசிக்காரர்கள் உணர்ச்சிரீதியாக கடுமையாகப் பேச மாட்டார்கள், ஆனால் அவர்களின் செயல்பாடுகள் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கடுமையாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களின் கொடூர குணம் அவர்களின் வெறுப்பிலும், பற்றின்மையிலும் வெளிப்படும். அவர்களுக்கு பிடிக்காத விஷயங்கள் நடக்கும் போட்டு அவர்கள் தங்களின் உணர்ச்சிகளை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டு மற்றவர்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்தலாம். இந்த உணர்ச்சிபூர்வமான தூரம் அவர்களை இதயமற்றவர்களாக வெளிகாட்டக்கூடும்.
அவர்கள் ஒருவர் மீது இரக்கப்படுவதை விட அதில் அவர்களுக்கு என்ன பலன் என்று லாஜிக்காக சிந்திப்பார்கள். ஒரு கும்ப ராசிக்காரர் நீங்கள் அவர்களின் நேரத்திற்கு தகுதியற்றவர் என்று முடிவு செய்தால், உடனடியாக உங்களை அவர்கள் வாழ்க்கையிலிருந்து வெளியேற்றுவார்கள். அவர்களின் இந்த அலட்சியம் மற்றவர்களை கொடூரமாக காயப்படுத்தக்கூடும். அவர்களிடம் உணர்வுபூர்வமான ஆதரவை எதிர்பார்த்தால் நீங்கள் ஏமாந்துதான் போவீர்கள்.
மேஷம்
உக்கிரமான கோபத்திற்கு பெயர் பெற்ற மேஷ ராசிக்காரர்கள் இந்த பட்டியலில் இறுதி இடத்தில் இருக்கிறார்கள். மேஷ ராசிக்காரர்கள் தூண்டப்படும்போது வெடிக்கும் தன்மையுடையவர்களாக மாறலாம், மேலும் அவர்களின் இரக்கமின்மை அவர்களின் கோபத்திலிருந்து வருகிறது.
அவர்கள் பேசுவதற்கு முன்பு எப்போதும் யோசிப்பதில்லை, எனவே அவர்களின் வார்த்தைகள் ஆழமான காயத்தை ஏற்படுத்தும். ஒரு மேஷ ராசிக்காரர்கள் கோபமாக இருக்கும்போது, அவர்கள் நேரடியாக வார்த்தைப்போரில் ஈடுபடுவார்கள், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி அவர்களின் கோபம் போய்விட்டால், அவர்கள் தங்களின் செயல்களுக்காக வருந்துவார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












