Latest Updates
-
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உலகில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் பழமையான கரன்சிகள் - எந்த நாட்டு பணம் முதலிடத்தில் இருக்கு தெரியுமா? -
செப்டம்பர் 17-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்..
இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப ஆபத்தானவர்களாம்... இவங்க கோபம் உலகத்துக்கு பேரழிவை ஏற்படுத்தும்...!
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு ராசிக்கும் ஒரு சிறப்பு குணம் இருக்கும். சில ராசிகளில் பிறந்தவர்கள் தேவதை போல் தூய்மையான ஆன்மாக்களாக இருப்பார்கள், அதேசமயம் சில ராசிக்காரர்கள் சாத்தானின் ராசிகளாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் பிறவியிலேயே தீயவர்கள் அல்ல.
ஆனால் தேவைகள் ஏற்படும் போது ஆபத்தான நடத்தைக்கு வழிவகுக்கும் போக்குகளைக் கொண்டுள்ளனர். நீங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமெனில் இந்த ராசிக்காரர்களிடம் ஒருபோதும் வம்பு வைத்துக் கொள்ளக்கூடாது. அவர்கள் தங்களுடைய மோசமான குணத்தை கட்டுப்படுத்தாமல் விட்டால் அவர்கள் பேரழிவை ஏற்படுத்துபவர்களாக இருப்பார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
இரட்டை ஆளுமை கொண்ட மிதுன ராசிக்காரர்கள் வசீகரம், புத்திசாலித்தனம் மற்றும் சிறந்த பேச்சாற்றல் போன்ற சில நேர்மறையான குணங்கள் இருக்கும். இந்த பண்புகள் மற்றவர்களை மிகவும் ஈர்க்கக்கூடியதாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும். மறுபுறம், இந்த குணாதிசயங்கள் சவாலான தருணங்களில், கணிக்க முடியாத தன்மை மற்றும் நம்பமுடியாத நடத்தைக்கு வழிவகுக்கும்.
காயமடைந்த மிதுன ராசிக்காரர்கள் உண்மையை மறைத்து வதந்திகளை பரப்புவதில் நிபுணர்களாகி இருப்பார்கள். அவர்கள் ஒரு சூழ்நிலையின் உண்மைகளை தங்களின் வசதிக்கு ஏற்ப கையாள முடியும், மேலும் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியும்.
மிதுன ராசிக்காரர்கள் தவளை போல சூழலுக்கு ஏற்ப வாழக்கூடியவர்கள். எனவே அவர்கள் உண்மையை தங்கள் வசதிக்கு ஏற்ப மாற்றி கேட்பவர்களை குழப்பமடையச் செய்யலாம். அவர்களின் இரட்டை இயல்பு ஆரோக்கியமற்ற சூழ்நிலைகளில் இருமுகப் பண்புக்கு வழிவகுக்கும். அவர்கள் எந்த விஷயங்களை விரும்பினால் அதனை அடைய எந்த குறுக்கு வழியில் வேண்டுமென்றாலும் செல்வார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் மனஉறுதி, ஆர்வம் மற்றும் தீவிர உணர்ச்சிகளுக்கு பெயர் பெற்றவர்கள். இந்த குணாதிசயங்கள் பிறவியிலேயே எதிர்மறையானவை அல்ல. இருப்பினும், இந்த ராசிக்காரர்கள் தங்கள் மோசமான குணங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிட்டால், சூழ்ச்சி செய்யும் திறன் கொண்டவர்களாக இருக்கலாம்.
துரோகம் செய்யப்பட்டதாகவோ அல்லது ஏமாற்றப்பட்டதாகவோ உணர்ந்தால், விருச்சிக ராசிக்காரர்கள் அவர்களை மன்னிக்கவும் மாட்டார்கள், மறக்கவும் மாட்டார்கள். நீண்ட காலமாக, பகையை சுமக்கும் அவர்களின் திறன், அவர்களை மிகவும் ஆபத்தானவர்களாக மாற்றும். காயமடைந்த விருச்சிகம் பெரும்பாலும் தங்கள் நேரத்தை பழிவாங்குவதற்காகவே ஒதுக்கி, யாராவது எதிர்பார்க்காத நேரத்தில் தாக்குவார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள், தொலைநோக்கு சிந்தனை உடையவர்கள் மற்றும் விதிகளைப் பின்பற்றுபவர்கள். அவர்கள் தங்கள் விதியை வடிவமைக்க முயல்கிறார்கள். இந்த குணங்களை நேர்மறையாகப் பயன்படுத்தும்போது அவை உலகிற்கு நன்மையை ஏற்படுத்தக்கூடும்.
இருப்பினும், அவர்களின் இருண்ட பக்கம் விழித்துக் கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். அவர்களின் இருண்ட பக்கத்தில் இரக்கம் என்பதே கிடையாது. அவர்கள் தர்க்கரீதியானவர்களாகவும் யதார்த்தமானவர்களாகவும் இருப்பதால் அவர்கள் அவநம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
மகர ராசிக்காரர்கள் அந்தஸ்து மற்றும் தொழில் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் இலக்கை அடைய அல்லது புதிய உயரங்களை அடைய மற்றவர்களைப் பயன்படுத்த பயப்படுவதில்லை. அவர்களின் லட்சிய வெறி கட்டுப்படுத்தப்படாவிட்டால், அவர்கள் சில சமயங்களில் அனைவரையும் காயப்படுத்தலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

