Latest Updates
-
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..
Today Rasi Palan 27 November 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் தடைபட்ட வேலைகள் முடிவடையும்...
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.15-10.15 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 12.00-1.30 மணி வரை. குளிகை காலை 10.30-12.00 மணி வரை. எமகண்டம் காலை 7.30-9.00 மணி வரை. சூலம் - வடக்கு திசை. பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். அரசுப் பணிகள் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தால், அது இன்று முடிவடையலாம். உங்களின் சில திட்டங்கள் நிறைவேறும். இன்று நீங்கள் ஒரு பெரிய முதலீடு செய்யலாம், அது உங்களுக்கு நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று உங்களின் வசதிகள் அதிகரிக்கும். புதிதாக ஏதாவது கற்றுக் கொள்ள நினைப்பீர்கள். உடன் வேலை செய்வோரிடம் பேசும் முன் மிகவும் கவனமாக பேச வேண்டும். உங்கள் வேலையில் மாற்றங்களைச் செய்ய விரும்பினால், அதை இன்று செய்யலாம். வியாபாரத்தில் எந்தவொரு ஒப்பந்தத்தையும் முடிக்க உங்கள் தந்தையிடம் பேச வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று புதிய தொடர்புகளால் நன்மைகள் கிடைக்கும். குடும்ப விவகாரங்களை தீர்க்க வேண்டும். வேலையில் தவறு செய்தால், உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையை முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று உங்கள் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் பிள்ளையின் பிரச்சனைகளில் நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் அவர் தவறான பாதையில் செல்லலாம். வியாபாரத்தில் எந்த ஒரு முக்கிய முடிவையும் மிகவும் யோசித்து எடுக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சமாளிக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு நம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக குடும்பப் பிரச்சனைகள் உங்களைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தால், அவை நீங்கும். வேலை சம்பந்தமான எந்த முடிவையும் உங்கள் தந்தையின் உதவியோடு எடுக்கலாம். உங்களைச் சுற்றியுள்ள சூழல் இனிமையாக இருக்கும். இன்று நீங்கள் நீண்ட தூர பயணம் செல்லலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பீர்கள். பணம் சம்பந்தமான எந்த விஷயத்திலும் அலட்சியமாக இருக்க வேண்டாம். நீங்கள் ஒருவருக்கு வாக்குறுதி அளித்திருந்தால், அதையும் நிறைவேற்ற வேண்டும். தேவையில்லாமல் எந்த வேலையிலும் ஈடுபடாதீர்கள், இல்லையெனில் அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சுமாராக இருக்கும். பணியில் முழு கவனம் செலுத்த வேண்டும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரலாம். தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும் என்பதால், பட்ஜெட்டில் கவனம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். ஏதேனும் பணிகள் நிலுவையில் இருந்தால், அது முடிவடையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று உங்கள் செல்வம் பெருகும். யாருடனும் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பெரியவர்கள் சொல்வதை கேட்டு நடந்தால், பயனுள்ளதாக இருக்கும். எந்த ஒரு வேலையையும் கூட்டு சேர்ந்து செய்வது நல்லது. நீங்கள் ஏதேனும் உடல்நலப் பிரச்சனையை எதிர்கொண்டிருந்தால், இன்று அப்பிரச்சனை பெரிய செலவை வைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று நீங்கள் கடினமாக உழைக்க வேண்டிய நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். வியாபாரிகள் பெரிய சாதனை புரியலாம். கூட்டு சேர்த்து வேலை செய்தால் பணிகளை எளிதாக முடிப்பீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். நீதிமன்றம் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். நீங்கள் உங்கள் வேலையில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் வேலையில் அலட்சியம் காட்டினால், பெரிய தவறு நேரலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் பழைய நண்பர் ஒருவர் உங்களைச் சந்திக்க வரலாம். சற்று பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். வீட்டு பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் படிப்பில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் மன உறுதியும் அதிகமாக இருக்கும். உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும். எந்த வேலையில் குழப்பம் இருந்தாலும் அது தீரும். அரசு தொடர்பான விஷயங்களில் கொஞ்சம் யோசித்துத் தான் முடிவெடுக்க வேண்டும், இல்லையெனில் பிரச்னைகள் அதிகரிக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications