Today Rasi Palan 23 December 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத சந்தோஷம் காத்திருக்காம்...!

Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.

அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி திங்கள் கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 23 December 2024 Daily Horoscope in Tamil Today Horoscope in Tamil

மேஷம்

இன்று முக்கியமான விஷயங்களில் தள்ளிப்போடுவதைத் தவிர்க்கவும். உங்கள் கடின உழைப்பால் எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெறுவீர்கள். சக ஊழியர்கள் மற்றும் நண்பர்கள் சொல்வதைக் கேளுங்கள் மற்றும் அவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். ஆர்வத்துடன் பணிகளை செய்யவும், தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

உங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். உங்கள் இலக்குகளில் அதிக கவனம் செலுத்துங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருங்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஊதா.

ரிஷபம்

இன்று நீங்கள் மோசமான நாளை அனுபவிக்காலம். உங்கள் புத்திசாலித்தனம் இன்று உங்களுக்கு துணையாக இருக்காது, இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் தவறானவை என்று நிரூபணமாகலாம். இன்று உங்கள் நண்பர்கள் மற்றும் சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இன்று நீங்கள் சில பெரிய நிதி இழப்பையும் சந்திக்க நேரிடலாம். வழக்கத்தை விட இன்று உங்கள் இயல்பில் அதிகப்படியான கோபம் இருக்கும். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவது இன்று உங்களின் முக்கிய முன்னுரிமையாக இருக்க வேண்டும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

மிதுனம்

இன்று உங்களுக்கு அற்புதமான நாளாக இருக்கும். ஆபத்தான மற்றும் அதிக உடல் உழைப்புத் தேவைப்படும் வேலைகளைத் தவிர்க்கவும். இன்று செல்வாக்கு மிக்க ஒருவரை சந்திக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் தேர்வுகளில் வெற்றிப்பெறலாம்.

ஆன்மீக நடவடிக்கைகளில் சிறிது நேரம் செலவிடுங்கள், இது உங்களுக்கு மன அமைதியைத் தரும். சொத்து, வாகனம் சம்பந்தமாக பிரச்சனைகள் வரலாம். வணிகத்தில் புதிய தொழில்நுட்பத்தைப் பற்றி தெரிந்து கொள்வது நல்லது, எனவே உங்கள் வணிகச் செயல்பாட்டில் சில மாற்றங்களைச் செய்ய முயற்சிக்கவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.

கடகம்

இன்று வாழ்க்கை முறையில் சில சாதகமான மாற்றங்கள் ஏற்படும், வாழ்க்கைத்துணையின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை வாய்ப்புக்கான முயற்சிகள் வெற்றி பெறும். வேலையில் இருப்பவர்கள் பணியிடங்களில் அவசரப்படுவதை தவிர்க்க வேண்டும்.

இன்று உங்கள் வீட்டுச் செலவுகள் அதிகமாகலாம். நீங்கள் புதிய வருமான ஆதாரங்களைப் பெறலாம், எனவே கவலைப்படத் தேவையில்லை. வியாபாரத்தில் இருப்பவர்கள் இன்று நேர்மறையான லாபங்களை எதிர்பார்க்கலாம். உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் நீலம்.

சிம்மம்

இன்று நீங்கள் வீட்டுக்குத் தேவையான புதிய பொருள் ஒன்றை வாங்கலாம். குழந்தைகளின் கல்வி மற்றும் தொழில் சம்பந்தமான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம் மன அழுத்தம் இல்லாமல் இருப்பீர்கள். உங்கள் திட்டத்தைப் பற்றி நம்பகமான நபரிடம் கூறுவது சரியான ஆலோசனையை வழங்கும்.

நீங்கள் பேசும் விதம் உங்களுக்கு நெருக்கமான ஒருவருக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம். பண விஷயங்களில் இன்று உங்களுக்கு நஷ்டம் ஏற்படலாம், எனவே நீங்கள் முக்கியமான செலவுகளைக் குறைக்க வேண்டியிருக்கும். இன்று சிறிய விஷயங்களுக்காக வருத்தப்படுவதைத் தவிர்க்கவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.

கன்னி

இன்று சில பெரிய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும் நாளாக இருக்கலாம். எதிர்பாராத லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வி தொடர்பான சிக்கல்களில் இருந்து விடுபட்டு மீண்டும் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் அமைதியான முறையில் தீர்க்கப்படும்.

புதிய முதலீடுகளை செய்வதற்கு இது மிகவும் சாதகமான நாள். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுப்பதைத் தவிர்க்கவும். இன்று தவறான செயல்களில் உங்கள் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்கவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.

துலாம்

இன்று துலாம் ராசிக்காரர்கள் பிரபலமான ஒருவரை சந்திக்கலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் இன்று நிறைவேறும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் இலக்கில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். புதிய நிறுவனத்தில் சேர வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் எந்த ஒரு திட்டத்தையும் உருவாக்கும் முன், தீவிரமாக சிந்திக்க வேண்டியது அவசியம், இல்லையெனில் சில தவறுகள் நடக்கலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் கருப்பு.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இன்று பல வேலைகளில் பிஸியாக இருப்பார்கள், இதன் காரணமாக அவர்கள் சற்று சோர்வாக உணரலாம். இன்று பிரபலங்களின் சந்திப்பு உங்களுக்கு நன்மை பயக்கும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு இன்று நல்ல வாய்ப்பு அமையும்.

எதிர்மறையான செயல்பாடுகளைக் கொண்டவர்களிடமிருந்து விலகி இருங்கள், அவர்களின் தவறான ஆலோசனைகள் புறக்கணிப்பது நல்லது. அதேசமயம் வீட்டில் உள்ள பெரியவர்களின் அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் புறக்கணிக்காதீர்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கிரகங்களின் நிலை சாதகமாக உள்ளது. உங்கள் நம்பிக்கையையும், விடாமுயற்சியையும் கைவிட்டு விடாதீர்கள். பணியிடத்தில் கடினமான பணிகளையும் உங்கள் மன உறுதியின் துணையால் செய்து முடிப்பீர்கள்.

நீங்கள் ஏதேனும் மூலதன முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், இன்றைய நாள் அதற்கு ஏற்ற நாளாக இருக்கும். திடீரென்று உறவினர் வீட்டிற்கு செல்ல நேரிடலாம். குடும்பத்தின் மூத்த உறுப்பினரின் உடல்நிலை குறித்து சிறிது கவலைகள் ஏற்படலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மெரூன்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று சில எதிர்பாராத சிரமங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் சில நாட்களாக இருந்து வந்த கருத்து வேறுபாடு இன்று முடிவுக்கு வரும். பூர்வீக சொத்து சம்பந்தமாக சகோதரர்களுடன் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்த நேரத்தில் புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும், இல்லையெனில் நஷ்டம் ஏற்படலாம். தனிப்பட்ட பிரச்சினைகள் மற்றும் மன அமைதியின்மை காரணமாக, இன்று நீங்கள் மிகவும் மோசமான நாளை அனுபவிப்பார்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சூழ்நிலைகள் மிகவும் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் உங்களின் கணிப்புகள் துல்லியமாக செயல்படும், சில காலம் உங்களுக்கு எதிராக இருந்தவர்களும் உங்களுக்கு ஆதரவாக வருவார்கள்.

அதிக செலவு அல்லது கடன் வாங்குவதை தவிர்க்கவும், இல்லையெனில் உங்கள் நிதி நிலைமை மோசமடையலாம். குடும்பத்துடனான உறவுகள் வலுவடையும், அவர்களுக்கு தேவையான உதவிகளை முழுமனதுடன் செய்வீர்கள். இந்து உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஸ்கை ப்ளூ.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்று முக்கியக் கோவில்களுக்குச் செல்லலாம், இது உங்களுக்கு மன அமைதியைத் தரும். சமூகப் பணிகளில் சிறப்பாக செயல்படுவீர்கள், இதனால் உங்கள் மரியாதையும் அதிகரிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பல வேலைகளில் பிஸியாக இருப்பீர்கள்.

ஒழுக்கக்கேடான செயல்களில் உங்கள் கவனம் ஈர்க்கப்படலாம், எனவே அவற்றை கவனமாக புறந்தள்ளுங்கள். தேவையில்லாமல் அதிகரிக்கும் செலவுகள் உங்களைத் தொந்தரவு செய்யும், எனவே உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, December 23, 2024, 5:00 [IST]
Desktop Bottom Promotion