Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
Today Rasi Palan 22 November 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிறைய சவால்களை சந்திக்க நேரிடும்..
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.15-10.15 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 10.30-12.00 மணி வரை. குளிகை காலை 7.30-9.00 மணி வரை. எமகண்டம் காலை 3.00-4.30 மணி வரை. சூலம் - மேற்கு திசை. மூலம், பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று நம்பிக்கை நிறைந்து இருப்பீர்கள். எந்த வேலையை செய்தாலும், அதில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். உங்களின் தலைமைப்பண்புகள் அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்கள் எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். நீண்ட நாட்களாக அரசு தொடர்பான வேலைகள் நிலுவையில் இருந்தால், அது இன்று முடிவடையும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று நீங்கள் உங்களின் இலக்கை அடைவீர்கள். உங்களின் ஆளுமை மேம்படும். கொடுத்த வாக்குறுதியை எளிதில் நிறைவேற்றுவீர்கள். வியாபாரிகள் இன்று சவால்களை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் முழு கவனத்தை செலுத்த வேண்டியிருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று சுமாராக இருக்கும். தொழில் ரீதியாக ஏதேனும் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இன்று அதிலிருந்து விடுபடுவீர்கள். பரம்பரை சொத்து தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். விவாதங்களில் இருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். எதிர்காலத்திற்காக சில முதலீடுகளைச் செய்ய வேண்டியிருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு இனிமையாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் சில நல்ல செய்திகளைக் கேட்கலாம். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. அன்புக்குரியவர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்களின் வேலை புதிய திசையை நோக்கி செல்லும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பண பரிவத்தனைகளை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இன்று பண விஷயங்களில் ஏமாற்றப்படலாம். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறலாம். உறவுகளில் சில தவறான புரிதல்கள் ஏற்படலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று உங்கள் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். முடிவுகளை விவேகத்துடன் எடுக்க வேண்டும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம். தொழிலில் உங்களின் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகம் சந்திக்கலாம். சொத்துக்களை வாங்க நினைத்தால், கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரிகள் சில சவால்களை சந்திக்க நேரிடும். நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் நண்பர் ஒருவர் உங்களைச் சந்திக்க வரலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு பரபரபப்பான நாளாக இருக்கும். குடும்ப வேலைகளில் முழு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சகோதர சகோதரிகளுடன் நன்றாகப் பழகுவீர்கள். பரம்பரை சொத்து தொடர்பான விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். எந்த ரிஸ்க்கையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் உடன் வேலை செய்வோருடன் மனம் விட்டு பேசும் வாய்ப்பு கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு மோசமான நாளாக இருக்கும். அன்புக்குரியவர்களுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்கலாம். பட்ஜெட்டை மீறி செலவுகள் அதிகரிக்கலாம். தொழிலில் ஏதேனும் பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலை வழக்கத்தை விட மோசமாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் ஓடுவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவருக்கு நீங்கள் வாக்குறுதி அளித்திருந்தால், அதை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். வணிகத்தில் பெரிய முதலீடு செய்யலாம். ஆனால் அதற்கு அனுபவசாலிகளின் ஆலோசனைகளைப் பெற வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று நீங்கள் குடும்ப பிரச்சனைகளில் கவனத்தை செலுத்த வேண்டும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களிடையே தவறான் புரிதல்கள் ஏற்படலாம். எனவே எந்த ஒரு சூழ்நிலையிலும் பொறுமையாக இருந்து பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று மற்ற நாட்களை விட சிறப்பாக இருக்கும். சொத்து வாங்க அல்லது விற்க நினைத்தால், இந்நாளில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் இன்று முடிவடையும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். ஆனால் ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications