Latest Updates
-
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா?
Today Rasi Palan 19 January 2025: இன்று இந்த 5 ராசிக்காரர்கள் ரொம்ப ஜாலியாக இருப்பார்களாம்...!
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இந்த பதிவில் பார்க்கலாம்...

மேஷம்
இன்று உங்கள் கடந்த காலத்திலிருந்து ஒரு புதிய பாடத்தைக் கற்றுக்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பைப் பெறலாம். நீங்கள் ஒரு பழைய நண்பருடன் தொடர்பு கொள்ளலாம், ஆனால் அந்த நபர் உங்களுக்கு தீங்கு செய்ய நினைக்கலாம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் மனைவியிடமிருந்து ஒரு நல்ல செய்தி கிடைக்கக்கூடும். உங்கள் குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிட இது ஒரு சிறந்த நாள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
ரிஷபம்
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். நேர்மறையாக இருப்பது இன்று வேலையில் அற்புதங்களைச் செய்யும், உங்கள் அலுவலக சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் அன்புக்குரியவர் இன்று தங்கள் அன்பால் உங்களை நெகிழச் செய்வார்கள். உங்கள் நாள் கொஞ்சம் வேகமாக நகரும், ஆனால் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
மிதுனம்
இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்த முயற்சிப்பீர்கள். உங்கள் மனஅழுத்தம் குறையும். கூட்டு வேலைகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப உறவுகளில் முழு கவனத்தை செலுத்த வேண்டும். உடன் வேலை செய்பவர்கள் வேலையில் உங்களுக்கு முழுமையாக உதவுவார். நீங்கள் ஒரு புதிய சொத்தில் முதலீடு செய்ய திட்டமிடலாம். இன்று உங்கள் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
கடகம்
இன்று மற்றவர்களின் பேச்சை நம்பாதீர்கள். அதிக சோம்பேறித்தனத்தால் அனைத்து வேலைகளிலும் பின்தங்கியிருப்பீர்கள். பண விஷயங்களில் மிகவும் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்கவும். இதன் விளைவாக பெரிய இழப்பையும் சந்திக்கலாம். எனவே இந்த பழக்கத்தை உடனே மாற்றுங்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
சிம்மம்
உங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற உந்துதல் இன்று மிகவும் தீவிரமாக இருக்கும், மேலும் உங்கள் ஆர்வத்தையும் கனவுகளையும் நோக்கிச் செல்வதற்கான வாய்ப்பை உங்களுக்கு வழங்கும். நீங்கள் அதற்காக உழைக்க வேண்டும், ஒருபோதும் அதை தள்ளிப்போடக்கூடாது. நீங்கள் சோம்பேறியாக இருந்தால், வாழ்க்கையில் வளர முடியாது. இன்று சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய நாள். இன்று உங்கள் அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். தேவையற்ற கோபத்தைத் தவிர்க்க வேண்டும். பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும், இல்லையெனில் குடும்பத்தில் பல சிக்கல்கள் ஏற்படலாம். வியாபாரிகளுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். நிறைய லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஊதா.
துலாம்
இன்று நீங்கள் நன்றாக ஓய்வெடுக்க வாய்ப்பு கிடைக்கும். உங்கள் காதல் உறவில் பொறாமையை குறுக்கிட அனுமதிக்க வேண்டாம். நீங்கள் நினைப்பது போல விஷயங்கள் எதுவும் நடக்காது. ஒரு நல்ல நேரத்தை அனுபவிக்க நீங்கள் அதிக பணத்தை செலவழிக்க வேண்டியிருக்கும். உங்களின் மனஅழுத்தம் வெகுவாக அதிகரிக்கும். சிவப்பு இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறமாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று உங்களுக்கு பிச்சனைகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் மீது பொறுப்புகள் அதிகமாக இருப்பதால், அதிகம் சிரமப்படுவீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். மோசமான சூழ்நிலையில் பொறுமையாக இருக்க வேண்டும். எந்த வேலையையும் தள்ளிப் போடுவதைத் தவிர்க்க வேண்டும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சுமாரான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் பணியிடத்தில் ஒருவர் சொல்லும் வார்த்தை உங்களை மோசமாக உணர வைக்கலாம். உங்கள் வருமானம் நினைத்ததை விட அதிகரிக்கும். நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது கோபப்பட வாய்ப்புள்ளது. இன்று உங்கள் அதிர்ஷ்ட நிறம் நீலம்.
மகரம்
இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வேலை தொடர்பான மனஅழுத்தம் நீங்கும். ஆனால் வாழ்க்கைத் துணையுடன் சில பிரச்சனைகளால் வாக்குவாதத்தில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது. முன்னேற்றத்தில் இருந்த தடைகள் நீங்கும். குறுகிய பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. அப்படி பயணம் மேற்கொள்ளும் போது உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
கும்பம்
இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உங்கள் வேலையில் முழு கவனத்தை செலுத்தினால் வெற்றியை அடைவீர்கள். உங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளில் நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் அவர்கள் தவறான பாதையில் செல்லலாம். இன்று அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உங்களின் சொத்து தொடர்பாக இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
மீனம்
மீன ராசியினருக்கு, இந்த நாள் மகிழ்ச்சியையும், திருப்தியையும் அளிக்கும். உங்கள் குழந்தைகள் உங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார்கள். இருப்பினும், உங்கள் தேவையற்ற செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வேலையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம், ஆனால் பீதி அடையத் தேவையில்லை, இது உங்களின் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications