Today Rasi Palan 15 December 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கோபத்தையும், பேச்சையும் கட்டுப்படுத்தணும்..

Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.

அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 15 December 2024 Daily Horoscope in Tamil Today Horoscope in Tamil

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.45-8.45 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 9.00-10.30 மணி வரை. குளிகை காலை 6.00-7.30 மணி வரை. எமகண்டம் காலை 1.30-3.00 மணி வரை. சூலம் - கிழக்கு திசை. சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இன்று சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். முன்னேற்றத்தில் இருந்த தடைகள் நீங்கும். வியாபாரிகளுக்கு பெரிய ஆர்டர் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வாகனங்களை கவனமாகப் பயன்படுத்த வேண்டும். எந்த ஒரு வேலையிலும் பிரச்சனைகள் ஏற்பட்டால் உடன் பிறந்தவர்களின் உதவியால் தீர்வு கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இன்று உங்களின் பொருள் வசதிகள் அதிகரிக்கும். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கிய பிரச்சனைகள் சரியாகும். பணியிடத்தில் உங்களின் வேலை பாராட்டப்படும். எந்த வேலையாக இருந்தாலும் கவலைப்பட்டால் அதுவும் போய்விடும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இன்று பண பரிவர்த்தனை விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். சட்ட விஷயங்களிலும் கொஞ்சம் கவலைப்படுவீர்கள். கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே கவனக்குறைவாக இருப்பதை தவிர்க்க வேண்டும். முதலீடுகளை செய்ய சிறந்த நாளாக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! இன்று சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் வியாபாரம் முன்பை விட சிறப்பாக நடக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சண்டை ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களின் திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். பணியிடத்தில் சில புதிய திட்டங்களைப் பற்றி உங்கள் துணையுடன் விவாதிக்கலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இன்று சற்று சலசலப்பு நிறைந்த நாளாக இருக்கும். வெளியாட்களைப் பற்றி தேவையில்லாமல் பேசாதீர்கள். உங்கள் பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களுக்கு பிடித்ததை வாங்க எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிப்பீர்கள். உங்கள் தொழிலில் ஏதேனும் மாற்றம் செய்தால் அது உங்களுக்கு நல்லது. உங்களின் சில முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். காதலிப்பவர்கள் துணையுடன் நீண்ட தூர பயணம் மேற்கொள்ளலாம். பணிபுரிபவர்கள் இன்று சிந்தனையுடன் செயல்பட வேண்டும். முன்னேற்றத்தில் இருந்த தடைகள் நீங்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை தேடி வரும். நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் நண்பரை சந்திப்பீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இன்று நீங்கள் பொறாமை மற்றும் சச்சரவு செய்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அதிக வேலை காரணமாக அதிக டென்ஷன் இருக்கும். சொத்து விஷயத்திலும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இன்று வியாபாரிகளுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். குடும்ப விஷயங்களில் எதையும் யோசிக்காமல் பேசாதீர்கள். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். வாழ்க்கைத் துணையின் தொழில் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். பணிபுரிபவர்கள் இடமாற்றத்தை சந்திக்கலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இன்று எந்த ஒரு வேலையையும் மிகுந்த சிந்தனையுடன் செய்ய வேண்டும். திட்டமிட்டு செய்தால் சிறப்பாக இருக்கும். குழந்தைகளிடம் இருந்து சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். அரசியலில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! இன்று கலவையான நாளாக இருக்கும். முதலீடுகளை செய்ய நினைப்பவர்கள் மிகவும் கவனமாக சிந்திக்க வேண்டும். உங்கள் தந்தையைப் பற்றி நீங்கள் வருத்தப்படலாம். மூன்றாம் நபருடன் உங்களின் முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். குடும்ப விஷயங்களில் முழு கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இன்று உங்களின் செலவுகளில் முழு கவனம் செலுத்தி அவற்றைக் குறைக்க முயற்சிப்பீர்கள். தினசரி தேவைகளை நிறைவேற்ற நல்ல தொகையை செலவிடுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும் போது அதிக மன அழுத்தத்தை அனுபவிப்பீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! இன்று உங்கள் வேலையில் மற்றவர்களின் ஆலோசனைகளைத் தவிர்க்க வேண்டும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்கள் சில நற்செய்திகளைப் பெறுவார்கள். பணம் தொடர்பான ஏதேனும் வேலை நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தால், அது இன்று முடிவடையும். யாருடைய பேச்சுக்களுக்கும் மயங்கிவிடாதீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Sunday, December 15, 2024, 5:00 [IST]
Desktop Bottom Promotion