Latest Updates
-
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை!
Today Rasi Palan 14 December 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும்...
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.45-8.45 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 9.00-10.30 மணி வரை. குளிகை காலை 6.00-7.30 மணி வரை. எமகண்டம் காலை 1.30-3.00 மணி வரை. சூலம் - கிழக்கு திசை. சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று பணம் தொடர்பான விஷயங்களில் நல்ல நாளாக இருக்கும். செல்வம் பெருகும். எங்காவது பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும், அது உங்களுக்கு நல்ல பலனை அளிக்கும். ஆரோக்கியத்தை புறக்கணித்தால், பெரிய மருத்துவ செலவை சந்திக்க நேரிடும். இன்று வேலையில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று வருமானம் மற்றும் செலவுகளில் முழு கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும் போது உங்கள் டென்ஷன் அதிகரிக்கும். உங்கள் வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலையைத் திட்டமிட வேண்டும். எந்த ஒரு வேலையை வேறு ஒருவரிடம் ஒப்படைத்தால் அதை முடிப்பதில் சிக்கல் ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! நீங்கள் ஒரு நண்பரை சந்தித்து மகிழ்ச்சியடைவீர்கள், ஆனால் வெறுப்புணர்வை ஏற்படுத்தாதீர்கள். வெளிநாட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து சில ஏமாற்றமான தகவல்களைக் கேட்கலாம். எந்த ஒரு பிரச்சனைக்கும் தேவையில்லாத சண்டையில் ஈடுபட வேண்டாம், இல்லையெனில் அது பெரிதாகும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று புதிய வேலைகளைத் தொடங்க நல்ல நாளாக இருக்கும். வணிகம் ஏற்கனவே வளரும், இது உங்களுக்கு செழிப்பைக் கொண்டுவரும். குடும்பப் பிரச்சினைகளையும் ஒன்றாகத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். கடன் பிரச்சனை இருந்தால், இன்று அதை தீர்க்க முயற்சிப்பீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று முன்னேற்றப் பாதையில் முன்னேறும் நாளாக இருக்கும். வேலை சம்பந்தமாக பிரச்சனைகள் இருந்தால், அது மூத்த உறுப்பினர்களின் உதவியுடன் தீரும். சொத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டால், அனுபவம் வாய்ந்த நபர் இல்லாமல் தொடர வேண்டாம். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று புதிய வாகனம் வாங்க நல்ல நாளாக இருக்கும். வணிகர்கள் பெரிய திட்டத்தைப் பெறலாம். நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் புதிய விருந்தாளி வரலாம். உறவுகள் வலுவடையும். உங்களை சிறப்பாக நிரூபிக்க முயற்சிப்பீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! வேலையில் கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். உங்கள் துணையிடமிருந்து சில நல்ல செய்திகளைக் கேட்கலாம். உங்கள் உறவு முன்பை விட சிறப்பாக இருக்கும். யாருக்கேனும் வாக்குறுதி அளித்திருந்தால், அதை நிறைவேற்ற உங்களால் முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று வருமானத்தில் முழு கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். வருமான அதிகரிப்பால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வியாபாரத்தில் திட்டமிட்டு நல்ல தொகையை செலவு செய்வீர்கள். தொண்டு மற்றும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.. குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் வார்த்தைகளுக்கு முழு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் வேலையில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும், இதனால் உங்கள் வேலை எளிதாக முடிவடையும். வேலை தேடுபவர்களுக்கும் புதிய வேலை கிடைக்கும். குடும்பத்தில் உள்ள ஒருவரின் திருமணம் நிச்சயிக்கப்படுவதால், குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று உங்களுக்குசாதாரண நாளாக இருக்கும். வேலை சம்பந்தமாக உங்கள் தந்தை உங்களிடம் சில ஆலோசனைகளைப் பெறலாம். குடும்பத்தில் உள்ள ஒருவரின் உடல்நிலை மோசமடைந்து வருவதால் நீங்கள் கவலைப்படுவீர்கள். உங்கள் வேலைகள் எளிதாக நிறைவேறும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். காதல் லாழ்க்கை நன்றாக இருக்கும். யார் மீதும் பொறாமை உணர்வுகளை மனதில் கொள்ளாதீர்கள். பணியிடத்தில் கூட, உங்கள் வேலையில் அலட்சியமாக இருக்கக்கூடாது. உங்கள் வேலையில் உங்கள் முதலாளி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார். உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று வேலையை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்வீர்கள். மாணவர்கள் படிப்பில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அரசியலில் நல்ல கொடி நாட்டுவீர்கள். உங்கள் வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும், குடும்ப பிரச்சனையால் மன உளைச்சலில் இருப்பீர்கள். முக்கியமான தகவல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications