Latest Updates
-
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் இருவரும் மூன்றாம் உலகப்போர் பற்றி என்ன கணித்துள்ளார்கள் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...! -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா?
Today Rasi Palan 13 மே 2025: இன்று இந்த 5 ராசிக்காரங்க ராஜா மாதிரி வாழப்போறாங்களாம்...!
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி செவ்வாய் கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கலவையான நாளாக இருக்கும். பயணத் திட்டங்கள் தாமதமாகலாம். மனதில் தெளிவு அதிகரிக்கும் மற்றும் எதிர்காலத்தில் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும் என்பதால் இன்று நீங்கள் மிகவும் நிதானமாக சிந்திக்க வேண்டும். ஆரோக்கியம் சீராக இருக்கும். இருப்பினும், நீரேற்றமாக இருக்க போதுமான அளவு தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள். மனைவியுடன் சில சிக்கல்கள் வர வாய்ப்புள்ளதால் அமைதி காக்கவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்த முயற்சிப்பீர்கள். உங்கள் டென்சன் குறையும். கூட்டு வேலைகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப உறவுகளில் முழு கவனத்தை செலுத்த வேண்டும். பணியிடத்தில் உங்கள் உடன் வேலை செய்வோர் வேலையில் உங்களுக்கு முழுமையாக உதவுவார். நீங்கள் ஒரு புதிய சொத்தில் முதலீடு செய்ய திட்டமிடலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். உங்கள் வேலையில் முழு கவனத்தை செலுத்தினால் இலக்குகளை அடைவீர்கள். உங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளில் நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் அவர்கள் தவறான பாதையில் செல்லலாம். இன்று அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உங்களின் சொத்து தொடர்பான பிரச்சனைகள் இப்போது முடிவுக்கு வரும். இணர் உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஊதா .
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். எதிர்மறை எண்ணங்களை மனதில் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல் யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால் அதை நிறைவேற்றுவதில் உங்களுக்கு சிக்கல்கள் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் குறையலாம். நிதி நிலையில் கவனம் செலுத்த வேண்டும். புதிய சொத்து, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
சிம்மம்
இன்று உங்களின் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறுவதால் இன்று நீங்கள் ஒரு பயனுள்ள நாளை அனுபவிக்கலாம். செல்வாக்கு மிக்க ஒருவருடன் சந்திப்பு ஏற்படலாம்லாம், வியாபார முயற்சிகள் லாபத்தை அளிக்கலாம். நீண்ட காலத்திற்கு உங்களுக்கு பயனளிக்கும் திட்டங்களைத் தொடங்க இது ஒரு சிறந்த நேரம். உங்கள் குடும்பத்துடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் இது சிறந்த நாள். இன்று உங்களின் அதிர்ஷ்டம் நேரம் வெள்ளை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களில் காதலிப்பவர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக வெளியே செல்லாம். கூட்டு தொழில் செய்பவர்கள் கையெழுத்திடும் முன் ஆவணங்களை நன்கு கவனிக்க வேண்டும், இல்லாவிட்டால் ஏமாற்றமடையலாம். சொத்து விஷயங்களில் சிறிது ஏமாற்றம் அடைவீர்கள். முக்கியமான விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இல்லாவிட்டால் பிரச்னைகள் சந்திக்க நேரிடும். இன்று உங்கள் அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். பண பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையிடம் இருந்து ஆச்சரியமான பரிசைப் பெறலாம். குடும்பத்தில் சில சுப காரியங்கள் நடக்கலாம். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
விருச்சிகம்
விருச்சிக ராசிகாரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து சில நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். வணிகர்களுக்கு நல்ல ஒப்பந்தம் கிடைக்கும். மனதில் உள்ளதை தந்தையிடம் தெரிவிக்கும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு நல்ல பலனைத் தரும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சில எதிர்பாராத சிரமங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் சில நாட்களாக இருந்து வந்த கருத்து வேறுபாடு இன்று முடிவுக்கு வரும். பூர்வீக சொத்து சம்பந்தமாக சகோதரர்களுடன் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும், இல்லையெனில் நஷ்டம் ஏற்படலாம். தனிப்பட்ட பிரச்சினைகள் மற்றும் மன அமைதியின்மை காரணமாக, இன்று நீங்கள் மிகவும் மோசமான நாளை அனுபவிப்பார்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
மகரம்
மகர ராசிக்காரர்கல் இன்று சிறப்பான நாளை அனுபவிப்பார்கள். அன்பும் ஒத்துழைப்பும் உங்கள் இதயத்தில் மேலோங்கி இருக்கும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கும் நற்பெயரும் உயரும். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். உங்கள் பெற்றோரின் ஆசியுடன் நிலுவையில் உள்ள காரியம் நிறைவேறும். பணியில் இருப்பவர்கள் சாதகமான பணிச்சூழலை அனுபவிக்கலாம். எந்த ஒரு புதிய முயற்சியையும் தொடங்கும் முன் கவனமாக சிந்தித்து செயல்படவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ப்ளூ.
கும்பம்
இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு கலவையான நாளாக இருக்கும். நிதி சம்பந்தமாக ஒரு நண்பருடன் கருத்து வேறுபாடு உங்கள் உறவைப் பாதிக்கும் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கும். ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம். வேலையில் ஏற்படும் சவால்கள் சில இழப்புகளை ஏற்படுத்தலாம், மேலும் ஒரு முக்கிய வாய்ப்பு கைநழுவிச் செல்லலாம். கூடுதலாக, குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று நீங்கள் ஒரு லாபகரமான நாளை அனுபவிக்கப் போகிறீர்கள். ங்கள் ஒரு புதிய திட்டத்தை தொடங்குவது பற்றி பரிசீலித்துக்கொண்டிருந்தால், அதைத்தொடங்க இதுவே சிறந்த நேரம். உங்கள் மனம் அமைதியாகவும், மகிழ்ச்சியுடனும் இருக்கும். வணிக முயற்சிகள் நிதி ஆதாயங்களைக் கொண்டுவரும் மற்றும் உங்கள் குடும்ப வாழ்க்கை இணக்கமாக இருக்கும். உங்கள் நற்பெயரும் மரியாதையும் அதிகரிக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஊதா.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











