Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
Today Rasi Palan 12 October 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதைத் தவிர்க்கணும்...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.45-8.45 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 9.00-10.30 மணி வரை. குளிகை காலை 6.00-7.30 மணி வரை. எமகண்டம் காலை 1.30-3.00 மணி வரை. சூலம் - கிழக்கு திசை. மிருகசீரிடம், திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று உங்கள் மனம் அலைப்பாயும். எதிர்மறை உணர்வுகள் அதிகமாக இருக்கும். பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பண பரிவர்த்தனைகளை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் வார்த்தைகளை அலட்சியம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். புதிய வேலையைத் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். திடீர் நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணப்பற்றாக்குறையால் தடைபட்ட எந்த வேலையையும் இன்று முடிக்கப்படும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் உதவியால் கடினமான வேலைகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று சவால்களை கண்டு அஞ்சாமல் தைரியமாக எதிர்கொண்டால், நிச்சயம் வெற்றி கிடைக்கும். உங்களை சிலர் இன்று எரிச்சலூட்டலாம். அத்தகையவர்களை புறக்கணிக்க முயற்சி செய்யுங்கள். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அதிகமாக கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். அரசுப் பணியில் இருப்பவர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று பணியிடத்தில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய தொழில் திட்டங்களை தீட்டுவதற்கு சாதகமான நாள். உங்களின் வேலையை விடாமுயற்சியுடன் செய்வீர்கள். அன்புக்குரியவருடன் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதை வெளிப்படையாக பேசி தீர்க்க சிறந்த நாள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க தவறான உணவுப் பழக்கங்களிலிருந்து விலகி இருங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். முக்கிய முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுப்பீர்கள். யாருக்காவது கடன் கொடுத்திருந்தால், உங்கள் பணத்தை இன்று நீங்கள் திரும்பப் பெற வாய்ப்புள்ளது. பணியிடத்தில் மிகவும் சீரான முறையில் நடந்து கொள்ள வேண்டும். வீட்டின் சூழல் சாதகமாக இருக்கும். தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று அன்புக்குரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஆழமாகும். வேலையில் அலட்சியத்தால் பிரச்சனைகள் அதிகரிக்கும். வேலை சம்பந்தமாக நீண்ட பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. பண விஷயங்களில் அலட்டிக்கொள்ளாதீர்கள். காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். நிதி நிலை வலுபெறும். வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் கடின உழைப்பு பாராட்டப்படும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். மேலும் நிதி நிலையில் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொடர்ச்சியான செலவுகளால் உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். வேலை தொடர்பான கவலை இருந்தவாறு இருக்கும். வியாபாரிகளுக்கு இன்று மந்தமாக இருக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பெரியவர்களின் வார்த்தைகளைப் புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திப்பீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திய வேலைக்கான வாய்ப்பைப் பெறலாம். அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தால், நல்ல செய்திகளைப் பெறலாம். காதல் வாழ்க்கையில் புதிய திருப்பம் ஏற்படலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று உங்கள் எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஆனால் அவர்களை வெற்றி காண்பீர்கள். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புதிய வருமான ஆதாரத்தைப் பெறலாம். அன்புக்குரியவர்களிடமிருந்து உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். வணிகத் திட்டங்களை ரகசியமாக வைத்திருங்கள். வீட்டில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அது தீரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தோல் ஒவ்வாமை இருக்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று உங்களுக்காக நிறைய நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். வேலை தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் தீர்க்கப்படலாம் மற்றும் உங்கள் முக்கிய கவலைகள் நீங்கும். வியாபாரிகள் குழப்பத்தை சந்த்தால், அனுபவசாலிகளின ஆதரவைப் பெறுவது நல்லது வேலையை மாற்ற திட்டமிட்டிருந்தால், அவசரப்பட வேண்டாம். தந்தையிடமிருந்து சில நல்ல ஆலோசனைகளைப் பெறலாம். உங்கள் துணையிடமிருந்து அன்பும் ஆதரவும் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! நீங்கள் காதலித்து வந்தால், கவனமாக இருக்க வேண்டும். வேலை தொடர்பான முடிவுகளை அவசரமாக எடுப்பதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் இழப்புகள் ஏற்படலாம். வீட்டிற்கு சில விருந்தினர்களின் திடீர் வருகை உங்கள் திட்டங்களை சீர்குலைக்கும்.உங்கள் வேலையை குறித்த நேரத்தில் முடிக்க முயற்சிப்பீர்கள். இரவில் நீண்ட நேரம் விழித்திருந்து வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











