Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
Today Rasi Palan 12 November 2024: இன்று இந்த 5 ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கப்போகுதாம்...!
Daily Horoscope: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதமான மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி செவ்வாய்க் கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு தெரிந்த ஒரே வழி மட்டுமே உங்களுக்கு வெற்றியைக் கொடுக்காது என்று நீங்கள் உணர்வீர்கள். இன்று நீங்கள் அதிக உணர்ச்சிவசப்படுவீர்கள். உங்கள் காதல் உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள் மற்றும் உங்களின் பொறாமை உணர்வை மறைத்துக் கொள்ளவும். உங்கள் உள்ளுணர்வைப் பின்பற்றினால் கடினமான நிதி நிலைமை இன்று மாறும். இன்று நீங்கள் ஒரு குழுவுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். உங்களின் சுதந்திர போக்கு இன்று உங்களுக்கு ஆபத்தாக மாறலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
ரிஷபம்
விடாமுயற்சியே இன்று உங்கள் வெற்றிக்கான தாரக மந்திரம். இன்று வழக்கத்தை விட அதிகமாக உணர்ச்சிவசப்படுவீர்கள். அந்த பக்கத்தை உங்கள் காதலரிடம் தயங்காமல் காட்டுங்கள். இன்று உங்கள் நிதிநிலை பற்றிய விவரங்களை யாரிடம் பகிர வேண்டாம், இல்லையெனில் அதுவே உங்களுக்கு ஆபத்தாக மாறும். தாக்கும். நீங்கள் ஒரு நீண்ட கால திட்டத்தில் ஆர்வமாக இருப்பீர்கள், அதை இன்று அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
மிதுனம்
இன்று உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த நீங்கள் போராடலாம். உங்கள் அன்புக்குரியவருடன் நீங்கள் மனதிலுள்ள ஆசைகளைப் பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் தீவிர உணர்வுகளை மறைக்காதீர்கள். இன்று உங்கள் உள்ளுணர்வைப் பின்பற்றுங்கள். அவை உங்களை நிதிநிலையை வெகுவாக முன்னேற்றும். வழிகாட்டுதலுக்காக மக்கள் இன்று உங்களைத் தேடுவார்கள். உங்களால் முடிந்த அளவு அவர்களுக்கு உதவுங்கள். உங்களின் அதிர்ஷ்ட நிறம் நீலம்.
கடகம்
இன்று நீங்கள் நன்றாக ஓய்வெடுக்க வாய்ப்பு கிடைக்கும். உங்கள் காதல் உறவில் பொறாமையை குறுக்கிட அனுமதிக்க வேண்டாம். நீங்கள் நினைப்பது போல விஷயங்கள் எதுவும் நடக்காது. ஒரு நல்ல நேரத்தை அனுபவிக்க நீங்கள் அதிக பணத்தை செலவழிக்க வேண்டியிருக்கும். வேலையில் மனநிலையை எளிதாக்க அதிக முயற்சி செய்ய வேண்டும். உங்களின் மனஅழுத்தம் வெகுவாக அதிகரிக்கும். சிவப்பு இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறமாக இருக்கும்.
சிம்மம்
இன்று உங்களை நன்றாக அலங்கரித்துக் கொள்ளுங்கள். வீட்டில் நேர்மையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை நீங்கள் உணர்வீர்கள். ஒரு பொய்யை சொல்வது உங்களை பல சிக்கல்களில் மாட்ட வைக்கும். இதுவரை துரதிர்ஷ்டமாக இருந்த நிதி நிலை இன்று உங்களுக்கு சாதகமாக மாறும். கவனமாக இருங்கள். இன்று கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய அவசியத்தை நீங்கள் உணர்கிறீர்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
கன்னி
கோபம் இன்று அவசியமற்றதாக நீங்கள் நினைத்தாலும் உங்களால் அதனை தவிர்க்க முடியாது. இன்று நீங்கள் அதிக உணர்ச்சிவசப்படுவீர்கள். இந்த உணர்வுகளை உங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். செலவுகளை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க மறக்காதீர்கள். உங்கள் நிதி நிலைமை குறித்து அன்பானவர்களிடம் வெளிப்படையாக இருக்க வேண்டும். ஒரு சிக்கலைத் தீர்க்க அது உங்களுக்கு உதவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஊதா.
துலாம்
இன்று உங்களின் வேலைகளை வழக்கத்திற்கு மாறான முறைகளில் செய்வீர்கள். இன்று உங்களின் உணர்வுகளை தைரியமாக வெளிப்படுத்துங்கள். உங்களின் காதலியை ஆச்சரியப்படுத்த புதிய திட்டங்களை வகுக்காலம். இன்று நீங்கள் அதற்காக அதிக பணத்தை செலவழிக்க வேண்டியிருக்கும். இன்று ஒரு கடினமான பணி உங்களைத் தேடி வரலாம். நீங்கள் அதற்குத் தயாராக இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
விருச்சிகம்
இன்று உங்கள் தனிப்பட்ட அல்லது தொழில் வாழ்க்கையில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். திறந்த, நேர்மையான உரையாடல் இன்று உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும். உங்களின் பிரச்சினைகளை புதிய கண்ணோட்டத்தில் அணுக முயற்சியுங்கள். அது உங்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொடுக்கும். சக ஊழியர் மீது உங்களுக்கு சந்தேகம் வரலாம். இந்த சூழ்நிலையில் அவர்களை நம்புவதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
தனுசு
இன்று உங்களுக்கு ஏதாவது செய்ய விருப்பமிருந்தால், அதன் எதிர்வினையைப் பற்றி சிந்திக்காமல் அதை செய்யுங்கள். இது உங்களுக்கு புதிய அனுபவங்களைக் கொடுக்கும். இன்று உங்களின் செலவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும். உங்களுக்கு தேவையில்லை என்று தோன்றும் எந்த விஷயங்களையும் செய்யாதீர்கள். இன்று உங்கள் உள்ளுணர்வை பின்பற்றுங்கள். நீங்கள் கண்ணியமாக இருந்தால் மக்கள் உங்களுக்கு உதவ தயாராக இருப்பார்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
மகரம்
உங்கள் லட்சியங்கள் இன்று அனைவரிடமும் வெளிப்படும் மற்றும் அதை மறைப்பது மிகவும் கடினமாக இருக்கும். உங்கள் மனது சொல்வதைக் கேளுங்கள். உங்கள் துணையுடன் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க உங்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும் வேண்டும். இன்று உங்கள் நிதி வாழ்க்கையை ஒழுங்கமைக்கவும். நீங்கள் விரும்பும் வழியில் எல்லாம் செயல்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பிரச்சினைகளைத் தவிர்க்க நீங்கள் நீங்கள் ஆக்கபூர்வமாக சிந்திக்க வேண்டும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
கும்பம்
இன்று நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கலாம். இன்று உங்கள் காதலரிடம் மனம் விட்டு பேசுங்கள். அவர்கள் சொல்வதை நீங்கள் கேட்பது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். வியாபாரிகள் இன்று ஒரு லாபகரமான ஒப்பந்தத்தைப் பெறலாம். உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள், அது சொல்வதைச் செய்யுங்கள். நீங்கள் வேலை மாற விரும்பினால் அதற்கான வாய்ப்புக் கிடைக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஊதா.
மீனம்
இன்று எந்த விஷயத்தைப் பற்றியும் தீவிரமாக சிந்திக்க வேண்டும். கொஞ்சம் நிதானமாக இருங்கள். இது இன்று உங்களுக்கு மனஅமைதியைக் கொடுக்கும். கையில் கொஞ்சம் பணத்தை வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு தக்க சமயத்தில் உதவும். இன்று ஒரு நீண்ட கால பிரச்சினை முடிவுக்கு வரும். நீங்கள் அதற்கு சரியான தீர்வு காணலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











