Today Rasi Palan 11 January 2025: இன்று இந்த ராசிக்காரங்க பண விஷயங்களில் அசால்ட்டாக இருப்பதைத் தவிர்க்கணும்..

Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.

அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 11 January 2025 Daily Horoscope in Tamil Today Horoscope in Tamil

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.45-8.45 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 9.00-10.30 மணி வரை. குளிகை காலை 6.00-7.30 மணி வரை. எமகண்டம் காலை 1.30-3.00 மணி வரை. சூலம் - கிழக்கு திசை. துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இன்று நிதி ரீதியாக நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைப்பதால், உங்களின் வேலைகள் எளிதில் முடிவடையும். உங்கள் எதிரிகள் சிலர் உங்களைத் தொந்தரவு செய்ய முயற்சிப்பார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். வேலை விஷயத்தில் அதிக டென்சன் எடுக்கமாட்டீர்கள். பிள்ளையின் தொழிலில் பெரிய முதலீடு செய்வீர்கள். குடும்ப பிரச்சனையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், அந்த பிரச்சனை தீவிரமாகும். வாழ்க்கைத் துணைக்காக சில புதிய வேலைகளைத் தொடங்குவீர்கள். முக்கியமான வீட்டு வேலைகளை செய்து முடிப்பீர்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இன்று உங்களின் செலவுகள் அதிகரிக்கும். எதிரிகள் உங்களை தொந்தரவு செய்வார்கள். வேலையைப் பற்றிய கவலை நீங்கும். வேலையை முடிக்க மற்றொருவரை சார்ந்திருந்தால், அதை முடிப்பதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். இன்று உங்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! இன்று உங்களின் நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். காதல் வாழ்க்கையில் புத்துணர்ச்சி ஏற்படும். ஆரோக்கியம் சற்று மோசமாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படலாம். நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களைச் சந்திக்க பழைய நண்பர் வரலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இன்று சுமாராக இருக்கலாம். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வாகனங்கள் பெரிய செலவுகளை வைக்கலாம். பண விஷயங்களில் அசால்ட்டாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்த எந்த முக்கிய முடிவை எடுத்தாலும் வருத்தப்படுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கும். ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்ய வேண்டியிருப்பதால் உங்கள் கவலை அதிகரிக்கும். பெற்றோருக்குச் சேவை செய்வதில் அதிக நேரத்தைச் செலவிடுவீர்கள். உங்கள் பிள்ளையின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ரீதியான பிரச்சனைகளை எதிர்கொண்டால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இன்று சிறப்பான நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் சில வெற்றியடையும். வெளிநாட்டில் இருந்து வியாபாரம் செய்பவர்கள் சில நல்ல செய்திகளைக் கேட்கலாம். உங்கள் முன்னேற்றத்தில் இருந்த தடைகள் நீங்கும். பணம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொண்டால், அது தீர்க்கப்படும். வாகனத்தை கவனமாக ஓட்ட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். வீட்டு வாங்க கடனுக்கு விண்ணப்பித்திருந்தால், அதை எளிதில் பெறுவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் இன்று நிறைவேறும். வணிகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திக்கலாம். ஆனால் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் வெளியே செல்லாம். வியாபாரிகள் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். எந்த ஒப்பந்தத்தையும் புரிந்த பின்னரே முடிவெடுக்க வேண்டும். தேவையான பொருட்களை வாங்குவதற்கு நல்ல தொகையை செலவு செய்வீர்கள். கூட்டு சேர்ந்து சில வேலைகளைச் செய்வது நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்களே! இன்று மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உடல்நிலையில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதுவும் பெரிய அளவில் தீர்க்கப்படும். வாழ்க்கைத் துணையிடமிருந்து பரிசைப் பெறலாம். சில புதிய எதிரிகள் உருவாகலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இன்று பணிபுரிபவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். குடும்பச் சொத்து சம்பந்தமாக ஏதாவது தகராறு நடந்து கொண்டிருந்தால் அது நீங்கும். சிந்திக்காமல் எந்த வேலையையும் செய்யாதீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திக்கலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! இன்று குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி, ஒன்றுமை அதிகரிக்கும். தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வேலையில் சற்று பிஸியாக இருப்பீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, January 11, 2025, 5:00 [IST]
Desktop Bottom Promotion