Latest Updates
-
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை!
Today Rasi Palan 10 November 2024: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வரப்போகுதாம்...!
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே இன்று உங்கள் வழியில் வரும் புதிய வாய்ப்பு உங்களின் பேராசையைத் தூண்டலாம், ஆனால் கவனமாக இருங்கள். உங்கள் புத்திசாலித்தனமான செயல்களால் இன்று வழக்கத்தை விட அதிகமாக மக்களின் கவனத்தை ஈர்க்கலாம். விரைவாக பணக்காரர்களாகும் திட்டம் இன்று உங்களை தவறான பாதைக்கு அழைக்கலாம், அது உங்களை ஆபத்தில் தள்ளலாம். வேலையில் நேர்மையில்லாத எந்த செயலிலும் இறங்காதீர்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
ரிஷபம்
வீட்டில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிலவ இன்று உங்கள் உணர்வுகளை மறைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதில் கவனம் வேண்டும். உங்கள் காரியங்கள் நடக்க மற்றவர்களிடம் ஐஸ் வைத்து பேச வேண்டாம். இன்று உங்கள் செயல்களை நேர்மையாக செய்யுங்கள். நல்ல நேரம். மற்றவர்களிடம் உதவி கேட்க தயங்க வேண்டாம். நீங்களாகவே அனைத்து காரியங்களையும் செய்ய முடியாத என்பதை உணருங்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
மிதுனம்
எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் உங்களின் குணம் இன்று உங்களை ஆபத்தில் சிக்க வைக்கலாம். உங்கள் அன்புக்குரியவர்களுடன் இன்று மகிழ்ச்சியாக நேரத்தை செலவழிக்க வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்களுக்கு பிடித்த உணவை சமைத்து மகிழலாம். உங்கள் வாழ்க்கைத்துணைக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். உங்கள் வேலை சரியான நேரத்தில் செய்யப்படாவிட்டால் அது மற்றவர்களை வருத்தப்படுத்தலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
கடகம்
இன்று உங்கள் உள்ளுணர்வுகள் சொல்வதை நம்புங்கள். இன்று பகிர்ந்து கொள்வது எவ்வளவு சிறப்பானது என்று புரிந்து கொள்வீர்கள். இன்றைக்கு எவ்வளவு கிடைக்கிறதோ அந்த அளவுக்கு உங்கள் துணைக்குக் கொடுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு பிடித்தப் பொருட்களை நீங்கள் வாங்கலாம். உங்களுக்கு தேவையானவற்றை பேரம் பேசி வாங்க கூச்சப்படாதீர்கள். தைரியமாக இருக்க வேண்டிய நாளிது. இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம் நீலம்.
சிம்மம்
மக்களின் மனதை வெல்ல, அவர்கள் விரும்புவது எதுவென்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இன்று நீங்கள் நம்பகமானவர் என்பதை உங்கள் துணைக்கு நிரூபியுங்கள். அவர்கள் உங்களிடம் கேட்டதைச் செய்யுங்கள். இன்று உங்கள் பட்ஜெட்டை விட அதிகமாக செலவு செய்யாதீர்கள். உங்கள் துணைக்கு அவர்களுக்குரிய அங்கீகாரத்தைக் கொடுங்கள். இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
கன்னி
இன்று நீங்கள் பலருக்கும் சமாதானம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். உங்கள் விரக்தியைப் போக்க உங்கள் வாழ்க்கைத்துணை உதவுவார்கள். உங்கள் உணர்வுகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். முடிந்தால் உங்கள் பட்ஜெட்டை அவர்களுடன் பேசி சீரமைக்கவும். அது உங்களுக்கு கொஞ்சம் நிவாரணத்தைத் தரும். இன்று உங்கள் வெளிப்படைத்தன்மையையும், நேர்மையையும் கடைபிடிப்பது நல்லது. இன்று உங்கள் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
துலாம்
இன்று உங்களின் படைப்பாற்றல் சிறப்பாக இருக்கும் மற்றும் உங்களுக்கு பயனளிக்கும். ஒரு புதிய திட்டம் அல்லது யோசனை உங்களுக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும். உங்கள் வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிக்கலாம். உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் தேடிவரும். நீங்கள் கவனக்குறைவாக இருந்தால் அது உங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தலாம். காரியங்கள் சரியான நேரத்தில் செய்யப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஊதா.
விருச்சிகம்
இன்று முடிந்தவரை மோதல்களைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றாலும், இன்று நீங்கள் மன்னிப்பு கேட்கும் சூழல் ஏற்படலாம். இன்று உங்களின் செயல்கள் அனைத்தும் சிறப்பாக இருப்பதை உறுதி செய்யுங்கள். இன்று நீங்கள் மற்றவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் மற்றும் மற்றவர்களை துன்புறுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது. உங்களின் இராஜதந்திர திறமைக்கு இன்று சவால்கள் ஏற்படும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் கறுப்பு.
தனுசு
உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் மற்றும் உங்கள் பணிகளைச் செய்ய உங்களுக்கு உதவும் நபர்களை உங்கள் அருகில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் தற்போதைய உறவிலிருந்து நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதில் உறுதியாக இருங்கள். செலவுகளில் இன்று அதிக கவனம் தேவை. இன்று நீங்கள் செய்து முடிப்பதற்கு அதிக வேலைகள் உங்கள் எதிரில் வரும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
மகரம்
இன்று அனைத்து சூழ்நிலையிலும் சமநிலையை கடைபிடிக்க வேண்டியது அவசியம். உங்கள் துணையுடன் வீட்டில் அமைதியாக ஓய்வெடுங்கள். ஒன்றாக பிடித்த வேலைகளை செய்யுங்கள். தேடிவரும் நிதி வாய்ப்பை ஏற்றுக்கொள்ள அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டாம், இல்லையெனில் அந்த வாய்ப்பு உங்கள் கையை விட்டு நழுவலாம். இன்று கலை முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள். இன்று உங்கள் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
கும்பம்
இன்று எல்லோரிடமும் வெளிப்படையாக பேச வேண்டும். விவாதம் உங்களை நெருக்கமாக்கி, உங்களின் தேவை என்னவென்பதை புரிந்துகொள்ள உதவும். உங்களுக்காக பிடித்த ஒரு பொருளை வாங்க வாய்ப்பு கிடைக்கும். அதிக செலவு இல்லாமலே நீங்கள் அதனை வாங்கலாம். உங்கள் மனஉறுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்களிடம் இருக்கும் யோசனைகளை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளுங்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
மீனம்
இன்று உங்களின் பலவீனமும், குழப்பமும் உங்களைத் துன்புறுத்துகிறது. உங்கள் மனதில் தோன்றும் கேள்விகளை வெளிப்படையாகக் கேளுங்கள். உங்கள் துணை உங்களுக்கு அதிர்ச்சியான ஒரு விஷயத்தை சொல்லலாம். பண விஷயங்களில் முடிவுகளை விரைவாக எடுங்கள். இந்த விஷயத்தில் உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள். குழப்பமான மனநிலையில் வெளியே செல்ல வேண்டாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications