Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Today Rasi Palan 09 November 2024: இன்று இந்த 5 ராசிக்காரர்கள் செலவுகளைக் குறைக்க முயற்சிக்கணும்..
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 09 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.45-8.45 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 9.00-10.30 மணி வரை. குளிகை காலை 6.00-7.30 மணி வரை. எமகண்டம் காலை 1.30-3.00 மணி வரை. சூலம் - கிழக்கு திசை. புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று உங்களின் முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் செல்லலாம். ரியல் எஸ்டேட் தொடர்பான பிரச்சனைகள் தீரும். வியாபாரிகள் திட்டமிட்டு வேலைகளை செய்ய வேண்டும். எந்த ரிஸ்க்கையும் எடுக்கக்கூடாது. இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். விவாதங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். வரவு மற்றும் செலவை நன்கு கவனிக்க வேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திப்பார்கள். புதிய எதிரிகள் இன்று உருவாகலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று நம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்த முயற்சிப்பீர்கள். உங்கள் டென்சன் குறையும். கூட்டு வேலைகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப உறவுகளில் முழு கவனத்தை செலுத்த வேண்டும். பணியிடத்தில் உங்கள் உடன் வேலை செய்வோர் வேலையில் உங்களுக்கு முழுமையாக உதவுவார். நீங்கள் ஒரு சொத்தில் முதலீடு செய்ய திட்டமிடலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று கலவையான நாளாக இருக்கும். வெளிநாடு செல்ல நினைப்பவர்கள் சற்று கவனம் தேவை. மார்க்கெட்டிங் சம்பந்தப்பட்டவர்கள் சில நல்ல செய்திகளைப் பெறுவார்கள். சில தவறுகளால் பிள்ளைகளிடம் கோபப்படுவீர்கள். உங்கள் பொறுப்புகளை வேறு எவர் மீதும் சுமத்தாதீர்கள். குடும்பத்தில் இருந்து சில நல்ல செய்திகளைக் கேட்பீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று எதையும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய நாளாக இருக்கும். உங்கள் வேலைகளை பொறுமையாக முடிக்க வேண்டும். அலுவலகத்தில் வேலை தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். தொழிலில் உங்களின் கடந்த கால தவறுகள் சில வெளிவரலாம். குழந்தைக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். இன்று உங்களின் எந்த வேலையிலும் அலட்சியம் காட்டக்கூடாது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று பணியிடத்தில் சில சவால்களை சந்திக்க வேண்டி வரும். அரசியலில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் உங்களின் உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று நீங்கள் பிரச்சனைகளை அதிகம் சந்திப்பீர்கள். ஆனால் அந்த பிரச்சனைகளில் இருந்து உங்கள் ஞானத்தால் வெளியே வர வேண்டும். உங்கள் வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்ய நீங்கள் திட்டமிடலாம். சில புதிய வேலைகளில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கலாம். வியாபாரத்தில் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கும். செல்வாக்கு மிக்க சிலரை சந்திப்பீர்கள். அதிகரித்து வரும் செலவுகளைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று கலவையான நாளாக இருக்கு. உங்களின் பெரிய திட்டங்கள் எதுவும் இன்று நிறைவேறலாம். பண விஷயங்களில் நன்கு திட்டமிட்ட பின்னரே எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டும். வேலை சம்பந்தமாக உங்களுக்கு அதிக அழுத்தம் இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். எந்த ஒரு மோசமான சூழ்நிலையிலும் பொறுமை காக்க வேண்டும். ஆரோக்கியமாக இருக்க நீங்கள் தியானம் செய்ய வேண்டும்.
தனுசு
தனுச ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். உங்கள் வீட்டிற்கு புதிய உறுப்பினர் வரலாம். உறவுகளைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும்.மூத்த உறுப்பினர்களின் வார்த்தைகளுக்கு முழு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வியாபாரிகளின் மதிப்பு அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று சாதகமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்தின் மேம்படும். பிறர் விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தேவையில்லாமல் பேசும் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று கலவையான நாளாக இருக்கும். நிலுவையில் உள்ள எந்தவொரு வேலையும் முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும். வெளியாட்களிடம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். வியாபாரத்தில் உங்கள் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவீர்கள் ஆரோக்கியம் சற்று மோசமாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்கள் அன்றாட வழக்கத்தை பராமரிக்க வேண்டும். இதனால் உங்கள் பல பணிகளை எளிதாக முடிக்க முடியும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வாகனம் வாங்கலாம். வியாபாரம் செய்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். உங்களின் இலக்குகள் எளிதில் நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
