Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
Today Rasi Palan 06 December 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமா இருக்கணும்..
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 06 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.15-10.15 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 10.30-12.00 மணி வரை. குளிகை காலை 7.30-9.00 மணி வரை. எமகண்டம் காலை 3.00-4.30 மணி வரை. சூலம் - மேற்கு திசை. திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்கள் சில பொறுப்புகளைப் பெறலாம். கூட்டு வணிகம் செய்பவர்கள் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேலைக்காக மற்றொருவரை சார்ந்து இருப்பதைத் தவிர்க்க வேண்டும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியம் மோசமாக இருப்பதால், மன குழப்பத்தில் இருப்பீர்கள். குடும்ப உறுப்பினரின் பேச்சால் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாவீர்கள். ஆனால் அதை வெளிப்படையாக அவர்களிடம் காட்டிக் கொள்ளமாட்டீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று உங்களின் முக்கியமான திட்டங்கள் வெற்றிகரமாக நடக்கும். நீங்கள் ஒருவருக்கு வாக்குறுதி அளித்திருந்தால், அதை இன்று நிறைவேற்றுவீர்கள். காதலிப்பவர்கள் தங்கள் துணையுடன் எங்காவது வெளியே செல்லலாம். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று குடும்ப பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். உங்களின் நடத்தையால் குடும்ப உறுப்பினர்கள் வருத்தப்படுவார்கள். வயதில் மூத்தவர் ஏதாவது ஆலோசனை வழங்கினால், அதை ஏற்றுக் கொள்ளுங்கள். உடன் வேலை செய்வோர் உங்களை தொந்தரவு செய்ய முயற்சிக்கலாம். உங்கள் பிள்ளையின் முன்னேற்றத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று பண பரிவர்த்தனை விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு பெரிய முதலீடு செய்யும் முன்பும் கவனமாக சிந்திக்க வேண்டும். இன்று உங்கள் நம்பிக்கை வலுவாக இருக்கும். இதனால் வியாபாரத்தில் சில முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும். உங்கள் முடிவெடுக்கும் திறனால் நீங்கள் பயனடைவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று சிரமங்கள் நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஒரு வேலையிலும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அப்போது தான் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த வேலை கிடைக்காததால் வருத்தப்படுவீர்கள். கூட்டு தொழில் செய்து வந்தால், சண்டைகளை சந்திக்கலாம். எனவே சற்று கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று உங்கள் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும். கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். நண்பர்களில் ஒருவர் உங்களுக்காக பணம் தொடர்பான திட்டத்தை கொண்டு வரலாம். ஆனால் அதை நீங்கள் மிகவும் கவனமாக செயல்படுத்த வேண்டும். இன்று உங்கள் முன்னேற்றத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கும். உங்கள் வேலைகளை முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். யாருடனும் சிந்தித்து பேச வேண்டும். குடும்ப விஷயங்களில் டென்ஷனாக இருப்பீர்கள். குடும்ப உறுப்பினரின் உடல்நலப் பிரச்சினைகளை புறக்கணிக்காதீர்கள். இல்லாவிட்டால் அவரது நிலைமையை மோசமாக்கிவிடும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று எந்த வேலைக்கும் மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை. உங்களின் எந்த வேலையையும் மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்காதீர்கள். இல்லையெனில் அதை முடிப்பதில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்க்கையில் தொடர்ந்து பிரச்சனைகள் வரலாம். எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று முன்னேறும் நாளாக இருக்கும். நீண்ட நாட்களுக்கு பிறகு பழைய நண்பரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். நிலுவையில் உள்ள உங்கள் வேலைகள் அனைத்தும் முடிவடையும். உறவினர்களால் நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். உங்களின் சில ஆசைகள் நிறைவேறினால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை பலவீனமான நாளாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பப் பிரச்சனைகளை வேறு யாரிடமும் வெளிப்படுத்த வேண்டாம், இல்லையெனில் அதை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள். உங்கள் கடனை திருப்பி அடைப்பீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். நிதி நிலை குறித்து கவலையுடன் இருப்பீர்கள். உடன் வேலை செய்வோர் உங்கள் வேலைக்கு தடைகளை உருவாக்குவார். உங்கள் வேலையை திட்டமிட்டு செய்ய வேண்டும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள எந்தவொரு வேலையும் முடிவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











