Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
Today Rasi Palan 05 November 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தணும்...
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 05 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.45-8.45 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 3.00-4.30 மணி வரை. குளிகை காலை 12.00-1.30 மணி வரை. எமகண்டம் காலை 9.00-10.30 மணி வரை. சூலம் - வடக்கு திசை. கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று உங்களின் தன்னம்பிக்கை குறையும். மனம் ஒருவித கலக்கத்துடன் இருக்கும். தாயாரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. நிறைய அலைச்சலை சந்திப்பீர்கள். மோசமான நாளாக இருக்கும். செலவுகள் கையை மீறிப் போகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று பொறுமை இழந்து இருப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட அறிவுறுத்தப்படுகிறது. இன்று தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு சிரமம் நிறைந்த நாளாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். தேவையற்ற கோபத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். உங்களின் தொழிலில் மாற்றம் ஏற்படலாம். அலைச்சல் அதிகமாக இருக்கும். நண்பர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை நிறைந்து இருப்பீர்கள். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களின் மரியாதை அதிகரிக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று உங்களின் மனநிலை ஏற்றத்தாழ்வுகளுடன் இருக்கும். மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் உங்களின் வருமானம் அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று உங்களின் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நம்பிக்கை நிறைந்து இருப்பீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் பாராட்டைப் பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும் அதே வேளையில் செலவுகளையும் அதிகம் சந்திக்க நேரிடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். தேவையற்ற கோபத்தைத் தவிர்க்க வேண்டும். பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். வியாபாரிகளுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். நிறைய லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று மனதில் ஏதோ ஒரு பயம் உங்களை தொந்தரவு செய்யலாம். மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை தேடி வரும். ஆனால் ஆரோக்கியத்தில் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று உங்கள் கோபத்தைக் குறைக்க வேண்டும். அதேப் போல் பேச்சிலும் கவனம் செலுத்த வேண்டும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று உங்களின் மனம் அமைதியிழந்து இருக்கும். கோபத்தைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த கோபமே பல பிரச்சனைகளை சந்திக்க வைத்துவிடும். பேசும் போதும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. பணிபுரிபவர்களுக்கு வேலை மாற்றம் ஏற்படலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதே வேளையில் மனம் ஒருவித கலக்கத்துடன் இருக்கும். கோபத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். சிலருக்கு பணியிடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையில்லாமல் கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த கோபமே உங்கள் முன்னேற்றத்தை தடுத்துவிடும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications