Today Rasi Palan 05 மே 2025: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு கவலையான நாளாக இருக்கப்போகுதாம்...!

Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.

அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு மே 05 ஆம் தேதி திங்கள் கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 05 May 2025 Daily Horoscope in Tamil Today Horoscope in Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! நீண்ட நாட்களுக்குப் பின் இன்று உங்கள் மனம் அமைதியாக இருக்கும். முக்கியமான முடிவெடுப்பதில் உங்கள் குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள், இது உங்கள் பலத்தை அதிகரிக்கும். உங்கள் சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நிதி நிலை வெகுவாக மேம்படும். பயணத் திட்டங்கள் வெற்றி பெறும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது இன்று நல்லதல்ல. மன ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று உங்கள் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் நடத்தை உங்களை சங்கடப்படுத்தலாம். உங்களின் திட்டங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அதற்கு குறைவாக பேசுங்கள் மற்றும் அதிகமாக வேலை செய்யுங்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுமாரான நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துவீர்கள். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் மிகவும் பிஸியாக இருப்பார்கள். சில எதிரிகள் உங்களை தொந்தரவு செய்ய முயற்சி செய்யலாம். வணிகர்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துவது நல்லது. இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று கலவையான நாளாக இருக்கும். உடல்நிலையில் பெரிய மாற்றங்கள் இருக்காது, நீங்கள் பயணம் செல்லும்போதும் மற்றும் வாகனங்களைப் பயன்படுத்தும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்கள் நிதி உதவி வழங்குவார்கள், ஆனால் வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம். வீட்டில் உங்களுக்கும், உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே , வார்த்தைகளை மிகவும் கவனமாக பயன்படுத்தவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஊதா.

சிம்மம்

சிம்ம ராசிக்காரார்கள் இன்று இன்று கலவையான நாளாக இருக்கும். வேலையை திட்டமிட்டு செய்ய வேண்டும். வியாபாரிகள் பணத்தை முதலீடு செய்யும் முன் சிந்திக்க வேண்டும். வேலை செய்பவர்களின் சில திட்டங்கள் அவர்கள் கையை விட்டு போகலாம். குடும்ப உறுப்பினர் ஒருவரிடமிருந்து சில ஏமாற்றமான தகவல்களைப் பெறலாம். வேலையை தள்ளிப் போடுவதைத் தவிர்க்க வேண்டும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பிங்க் .

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்த முயற்சிப்பீர்கள். உங்கள் டென்சன் குறையும். கூட்டு வேலைகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப உறவுகளில் முழு கவனத்தை செலுத்த வேண்டும். பணியிடத்தில் உங்கள் உடன் வேலை செய்வோர் வேலையில் உங்களுக்கு முழுமையாக உதவுவார். நீங்கள் ஒரு சொத்தில் முதலீடு செய்ய திட்டமிடலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே இன்று உங்கள் வழியில் வரும் புதிய வாய்ப்பு உங்களின் பேராசையைத் தூண்டலாம், ஆனால் கவனமாக இருங்கள். உங்கள் புத்திசாலித்தனமான செயல்களால் இன்று வழக்கத்தை விட அதிகமாக மக்களின் கவனத்தை ஈர்க்கலாம். விரைவாக பணக்காரர்களாகும் திட்டம் இன்று உங்களை தவறான பாதைக்கு அழைக்கலாம், அது உங்களை ஆபத்தில் தள்ளலாம். வேலையில் நேர்மையில்லாத எந்த செயலிலும் இறங்காதீர்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் கருப்பு.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ஒரு அனுகூலமான நாளாக இருக்கும். மேலதிகாரிகளுடன் பயனுள்ள உரையாடல் ஏற்படலாம், நிலுவையில் உள்ள நிதி விவகாரங்கள் தீர்க்கப்படும். வியாபாரத்தில் வரும் லாபம் திருப்தியானதாக இருக்கும், மேலும் நிலுவையில் உள்ள கடனைத் திருப்பிச் செலுத்தலாம். உங்களின் முக்கிய ஆசைகள் இன்று நிறைவேறலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று தனிப்பட்ட அல்லது தொழில் வாழ்க்கையில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். திறந்த, நேர்மையான உரையாடல் இன்று உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும். உங்களின் பிரச்சினைகளை புதிய கண்ணோட்டத்தில் அணுக முயற்சியுங்கள். அது உங்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொடுக்கும். சக ஊழியர் மீது உங்களுக்கு சந்தேகம் வரலாம். இந்த சூழ்நிலையில் அவர்களை நம்புவதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மெரூன்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். பொறுமை மற்றும் துணிச்சலின் உதவியால் வேலைகளை செய்து முடிப்பீர்கள். சகோதர சகோதரிகளுடன் நன்றாகப் பழகுவீர்கள், எந்த வேலையிலும் அலட்சியமாக இருக்க வேண்டாம். உங்கள் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். உங்கள் குடும்ப உறவுகளை நீங்கள் சீராக நிர்வகிக்க வேண்டும். எந்தவொரு வேலையையும் திட்டமிட்டு செய்வது நல்லது. இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பிஸியான நாளாக இருக்கும். வேலையில் மும்முரமாக ஓடிக்கொண்டே இருப்பீர்கள். வியாபாரம் முன்னெப்போதையும் விட அதிகமாக வளரும். உங்கள் முக்கியமான ஆவணங்களை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவை திருடுப்போக வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகளை சந்திக்க வேண்டி வரும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று பதட்டமான நாளாக இருக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் பிஸியாக இருப்பீர்கள். வியாபாரத்தில் கிடைக்கும் லாபம் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். காதல் உறவில் இருப்பவர்கள் தங்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவிடுவார்கள். உங்களின் தேவைகளுக்கு நீங்கள் கணிசமாக செலவழித்தாலும், எதிர்காலத்திற்காக சேமிப்பதில் கவனம் செலுத்துவது முக்கியம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, May 5, 2025, 5:10 [IST]
Desktop Bottom Promotion