Today Rasi Palan 05 December 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதைத் தவிர்க்கணும்..

Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.

அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 05 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 05 December 2024 Daily Horoscope in Tamil Today Horoscope in Tamil

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 10.45-11.45 மணி வரை. ராகு காலம் காலை 1.30-3.00 மணி வரை. குளிகை காலை 9.00-10.30 மணி வரை. எமகண்டம் காலை 6.00-7.30 மணி வரை. சூலம் - தெற்கு திசை. மிருகசீரிடம், திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சிக்கல் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பயணங்களின் போது உங்கள் உடைமைகளை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும். அரசியலில் இருப்பவர்களுக்கு புதிய எதிரிகள் உருவாகலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இன்று முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து திகழ்வார்கள். வேலைகளை எளிதில் செய்து முடிப்பீர்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இன்று பழைய வேலைகளை முடிக்க முயற்சிப்பீர்கள். வியாபாரத்தில் தடைகளை சந்தித்து வந்தால், அந்த தடையையும் உடைத்து வெற்றி பெறுவீரகள். உங்கள் பிள்ளையின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்வீர்கள். குடும்ப பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! இன்று புதிய வேலைகளை தொடங்க சிறந்த நாளாக இருக்கும். பணம் சம்பந்தமான பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் நிச்சயமாக உங்களுக்கு உதவுவார்கள். வீட்டிற்கு விருந்தினர் வருகையால் வீட்டு சூழல் இனிமையாக இருக்கும். உங்கள் பிள்ளையின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்வீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இன்று பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். பரம்பரை சொத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இன்று சிந்தனையுடன் எந்த காரியங்களையும் செய்ய வேண்டும். ஒரு புதிய வீடு அல்லது கடை போன்றவற்றை வாங்கலாம். உங்கள் மரியாதை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்ப பிரச்சனைகளில் முழு கவனம் செலுத்த வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இன்று வாகனங்களை கவனமாகப் பயன்படுத்த வேண்டும். உங்கள் வியாபாரத்தில் சில இரகசிய எதிரிகள் மறைமுகமாக உங்களுடனேயே இருக்கக்கூடும். எனவே சற்று கவனமாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் முழு கவனம் செலுத்துவார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு ஆற்றல்மிக்க நாளாக இருக்கும். வேலையைச் செய்வதில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். யாருடைய பேச்சுக்களுக்கும் மயங்கிவிடாதீர்கள். தாயின் உடல்நிலையில் சில பிரச்சனைகளால் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் பழைய நண்பர் ஒருவர் உங்களைச் சந்திக்க வரலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இன்று உங்களின் செல்வம் அதிகரிக்கப் போகிறது. பணியிடத்தில் ஏதாவது ஒரு விஷயத்துக்காக உங்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டால், அதில் முழு கவனம் செலுத்துங்கள். வீட்டை புதுப்பிப்பதிலும் முழு கவனம் செலுத்துவீர்கள். சகோதர சகோதரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். முன்னேற்றத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். யாரிடமாவது எதையும் சொல்வதற்கு முன் யோசிக்க வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! இன்று ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும். கடனாக கொடுத்த பணத்தை திரும்ப பெறலாம். குடும்ப பிரச்சனைகளில் முழு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இன்று எந்த வேலையையும் யோசிக்காமல் செய்வதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் நீண்ட கால திட்டங்கள் வேகம் பெறும். வியாபாரிகள் கூட்டு வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும். புதிய திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். குடும்ப சண்டைகள் இன்று அதிகரிக்கலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! இன்று எந்த ஒரு வேலையிலும் மிகுந்த சிந்தனையுடன் செயல்பட வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள், இல்லையெனில் பிறகு வருத்தப்படுவீர்கள். உங்கள் வாழ்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணத்தில் தடை இருந்தால் அது நீங்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய நண்பரை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, December 5, 2024, 5:00 [IST]
Desktop Bottom Promotion