Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
Today Rasi Palan 03 மே 2025: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மறக்க முடியாத சுப நாளாக இருக்குமாம்...!
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு மே 03 ஆம் தேதி சனிக் கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ராசிக்காரர்களுக்கு இன்று உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும். குடும்ப வாழ்வில் அமைதி நிலவும். வாழ்க்கைத் துணையுடனான உறவு முன்பை விட சிறப்பாக இருக்கும். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். விருந்தினரின் வருகையால் வீட்டின் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். வாகனத்தை கவனமாக ஓட்ட வேண்டும், இல்லையெனில் விபத்து ஏற்படலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கலவையான நாளாக இருக்கும். பயணத் திட்டங்கள் தாமதமாகலாம். மனதில் தெளிவு அதிகரிக்கும் மற்றும் எதிர்காலத்தில் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும் என்பதால் இன்று நீங்கள் மிகவும் நிதானமாக சிந்திக்க வேண்டும். ஆரோக்கியம் சீராக இருக்கும். இருப்பினும், நீரேற்றமாக இருக்க போதுமான அளவு தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள். மனைவியுடன் சில சிக்கல்கள் வர வாய்ப்புள்ளதால் அமைதி காக்கவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மிகவும் சாதகமான நாளாக இருக்கும். நீங்கள் பணிகளில் தீவிர கவனம் செலுத்துவீர்கள் மற்றும் அதற்கான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் எண்ணங்கள் தெளிவாகவும் லாஜிக்காகவும் இருக்கும், இது எந்த சவாலையும் நீங்கள் எளிதாக எதிர்கொள்ள உதவும். இன்று தனிப்பட்ட உறவுகளில் நீங்கள் புரிந்துணர்வுடன் செயல்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவது மனதிற்கு புத்துணர்ச்சி தரும். உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். புத்திசாலித்தனம் மற்றும் திறமையான தலைமைத்துவ திறன்கள் மூலம் உங்கள் வேலையில் முன்னேறுவீர்கள். வியாபாரிகள் முதலீடுகளை செய்வதன் மூலம் வணிகத்தில் பெரிய லாபத்தை எதிர்பார்க்கலாம். நிதி நிலையில் பெரிய மாற்றத்தை உணர்வீர்கள். ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் நீலம்.
சிம்மம்
இன்று மோதல்கள் மற்றும் தவறான புரிதல்கள் நிறைந்த சவாலான நாளுக்கு தயாராக இருங்கள். அற்பமான விஷயங்களுக்காக வாக்குவாதங்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகள் எழலாம், இதனால் தேவையற்ற மன அழுத்தம் ஏற்படலாம். வேலையில் இருப்பவர்களுக்கு இன்று பணிச்சுமை நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும் மற்றும் எச்சரிக்கையுடன் செயல்படவும். இன்று உங்களுக்கு அதிஷ்டமான நிறம் பச்சையாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று புதிய தொடர்புகளால் நல்ல நன்மைகள் கிடைக்கும். உங்கள் முன்னேற்றத்தில் இருந்த தடைகள் நீங்கும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். வீட்டில் சண்டைகளை தவிர்த்தால்தான், குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளை எதிர்த்து பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இன்று திட்டமிட்டு பணத்தை செலவிட வேண்டும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
துலாம்
இன்று நீங்கள் பலருக்கும் சமாதானம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். உங்கள் விரக்தியைப் போக்க உங்கள் வாழ்க்கைத்துணை உதவுவார்கள். உங்கள் உணர்வுகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். முடிந்தால் உங்கள் பட்ஜெட்டை அவர்களுடன் பேசி சீரமைக்கவும். அது உங்களுக்கு கொஞ்சம் நிவாரணத்தைத் தரும். இன்று உங்கள் வெளிப்படைத்தன்மையையும், நேர்மையையும் கடைபிடிப்பது நல்லது. இன்று உங்கள் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று சாதகமான பலன்களைக் காண்பார்கள். மனைவியுடன் உல்லாசப் பயணம் மேற்கொள்ளும் திட்டங்கள் நிறைவேறலாம். குடும்பத்தில் புதிய உறுப்பினர்கள் சேரலாம், தொழில் தடைகள் குறையும். இருப்பினும், நண்பர்களாகத் தோன்றினாலும் போட்டியாளர்களாக மாறக்கூடிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
தனுசு
இன்று உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த நீங்கள் போராடலாம். உங்கள் அன்புக்குரியவருடன் நீங்கள் மனதிலுள்ள ஆசைகளைப் பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் உணர்வுகளை எதற்காகவும் மறைக்காதீர்கள். இன்று உங்கள் உள்ளுணர்வைப் பின்பற்றுங்கள். அவை உங்களை நிதிநிலையை வெகுவாக முன்னேற்றும். வழிகாட்டுதலுக்காக மக்கள் இன்று உங்களைத் தேடுவார்கள். உங்களால் முடிந்த அளவு அவர்களுக்கு உதவுங்கள். உங்களின் அதிர்ஷ்ட நிறம் நீலம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று உங்களுக்கு இனிமையான நாளாக இருக்கும். பேசியே பல பிரச்சனைகளை சமாளிப்பீர்கள். அதே சமயம் அதிகம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவே தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். எனவே மார்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்களின் திட்டங்களில் ஏதேனும் ஒன்று வெற்றி அடையலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று ஒரு நாளின் ஏற்ற, இறக்கங்கள் நிறைந்த நாளை எதிர்பார்க்கலாம், ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படக்கூடும். புதிய திட்டங்களைத் தொடங்குவதைத் தள்ளிப் போடுவது நல்லது, ஏனெனில் இது பணியிட சிக்கல்களுக்கு வழிவகுக்கும். தொழில் முயற்சிகளும் தடைகளை சந்திக்க நேரிடலாம், வேலையில் இருப்பவர்கள் இன்று அலுவலகத்தில் சவால்களை சந்திக்க நேரிடும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து நீங்கள் கவலைப்படலாம். குடும்ப உறுப்பினர்கள் சொத்து விஷயங்களில் வாக்குவாதம் செய்யலாம். உங்கள் தந்தையின் அறிவுரைகள் பலனளிக்கும். நீங்கள் ஒரு ஆன்மீக நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும், இது உங்களுக்கு மன அமைதியைத் தரும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











