Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
200 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள 3 திவ்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
Three Divya Rajyoga Formed After 200 Years: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் இணைந்து சுப அல்லது ராஜயோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாக்கும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
தற்போது நீதிமான் சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இதனால் கும்பத்தில் சச ராஜயோகம் உருவாகியுள்ளது. அத்துடன் சிம்ம ராசியில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகியுள்ளது. அதோடு சுக்கிரன், புதனுக்கு முன் சனி பகவான் உள்ளார். இதனால் இந்த 3 கிரகங்களுடன் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது.

இப்படி ஒரே வேளையில் உருவாகியுள்ள 3 ராஜயோகங்கள் சுமார் 200 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளது. இந்த 3 ராஜயோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். அதுவும் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போது இந்த 3 ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
3 திவ்ய ராஜயோகங்களால் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறலாம். நிதியைப் பொறுத்தவரை, வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். சொல்லப்போனால் பல வழிகளில் இருந்தும் பணம் தேடி வரும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்ள் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த 3 திவ்ய ராஜயோகங்களால் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பேச்சால் மற்றவர்களை கவர்ந்திழுப்பீர்கள். இதனால் பல காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணியிடத்தில் கொடுக்கப்பட்டுள்ள வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இக்காலத்தில் திடீர் நிதி ஆதாயம் கிடைக்கும். வருமானத்திலும் நல்ல உயர்வு ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த 3 திவ்ய ராஜயோகங்களானது நல்ல நிதி நன்மைகளை வழங்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் பெயரும், புகழும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. பங்குச் சந்தை, லாட்டரியில் முதலீடுகளை செய்ய நினைத்தால், இக்காலத்தில் செய்தால் நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications