Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
விசுவாவசு தமிழ் புத்தாண்டு 2025: சிம்மம் முதல் விருச்சிகம் வரையிலான ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
Tamil Puthandu Rasi Palan 2025: ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் போதும், அந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். இது ஆங்கில புத்தாண்டிற்கு மட்டுமின்றி, தமிழ் புத்தாண்டிற்கும் பொருந்தும். பொதுவாக தமிழ் மாதங்களானது சூரியன் ராசியை மாற்றும் போது பிறக்கின்றன.
அதில் சூரியன் மேஷ ராசிக்கு செல்லும் போது தான் புதிய ஆண்டு பிறக்கிறது. தமிழ் வருடங்கள் மொத்தம் 60 ஆகும். இதில் 39 ஆவது ஆண்டு தான் விசுவாவசு ஆண்டு. இந்த புதிய ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை மாதத்துடன் பிறந்தது.

இந்த விசுவாவசு தமிழ் புத்தாண்டு பிறந்த நேரத்தில் நவகிரகங்களின் சஞ்சாரம், பார்வையை பொறுத்து சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று ஜோதிடர் சொ. ஜெயலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
சிம்மம்
சூரிய பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 8 ஆம் வீட்டில் அமர்ந்து அஷ்டம சனியாக பயணம் செய்யும் சனிபகவான் நிறைய சோதனைகளை தரப்போகிறார். அதனையெல்லாம் சாதனையாக மாற்றுவதற்கு குருபகவான் உங்களுக்கு துணை நிற்பார். லாப ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகும் குருவினால் தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் நிறைய லாபம் கிடைக்கும்.
பங்குச்சந்தை முதலீடுகளில் லாபத்தை அள்ளப்போகிறீர்கள். ஆண்டின் பிற்பகுதியில் விரைய குருவினால் சுப விரைய செலவுகள் ஏற்படும். பொருளாதார நிலை மேம்படும். களத்திர ஸ்தானமான 7 ஆம் வீட்டில் பயணம் செய்யப்போகும் ராகுவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் குடும்பத்தில் சின்னச்சின்ன சண்டை சச்சரவுகள் வந்து போகும். தலைமேல் வந்து அமரும் ஜென்ம கேது சில நேரங்களில் மன குழப்பத்தை ஏற்படுத்துவார் கவனம் தேவை.
கன்னி
புதன்பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 7 ஆம் வீட்டில் அமர்ந்து கண்டச்சனியாக சனிபகவான் பயணம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். கணவன் மனைவி இடையே குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
குரு பகவான் பத்தாம் வீட்டில் அமர்ந்து தொழில் ஸ்தான குருவாக பயணம் செய்யப்போவதால் நினைத்தது எல்லாம் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவைப்படும். ராகு பகவான் உங்கள் ராசிக்கு 6 ஆம் வீட்டிலும் கேது உங்கள் ராசிக்கு 12 ஆம் வீடான விரைய ஸ்தானத்திலும் பயணம் செய்யப்போவதால் பண விசயங்களில் கவனம் தேவைப்படும் கேட்ட இடத்திலே கடன் கிடைக்கிறதே என்று வாங்க வேண்டாம் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.
துலாம்
சுக்கிரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 6 ஆம் வீட்டில் அமர்ந்து ருண ரோக சத்ரு ஸ்தான சனியாக பயணம் செய்யும் சனிபகவான் நிறைய அள்ளித் தரப்போகிறார். சனி கொடுப்பதை எவராலும் தடுக்க முடியாது.
கூடவே குரு பகவான் உங்கள் ராசிக்கு 9 ஆம் வீட்டில் அமர்ந்து பார்வையிடப் போவதால் குரு பலன் கிடைக்கப்போகிறது. நினைத்த காரியம் நிறைவேறும் தொட்டதெல்லாம் பொன்னாகும். உங்களை விட்டு விலகியவர்கள் உங்களை தேடி வரப்போகிறார்கள். ராகு உங்கள் ராசிக்கு 5 ஆம் வீட்டிற்கும் கேது உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திலும் பயணம் செய்யப்போவதால் ஆண்டு முழுவதும் பண வருமானம் கொட்டப்போகிறது.
விருச்சிகம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 5 ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்யும் சனிபகவான் ஆண்டு முழுவதும் சுகத்தையும் சந்தோஷத்தையும் தரப்போகிறார் சனிபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு சாதகமாக உள்ளது. குரு பகவான் உங்கள் ராசிக்கு 8 ஆம் வீட்டில் பயணம் செய்யும் காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
அக்டோபர் மாதத்தில் குரு பகவான் அதிசாரமாக 9ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாவதால் குரு பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. திருமண யோகம், குழந்தை பாக்கிய யோகம் கைகூடி வரும். 4 ஆம் வீட்டில் பயணம் செய்யப்போகும் ராகுவும், 10 ஆம் வீட்டில் பயணம் செய்யப்போகும் கேதுவும் உங்களுக்கு வேலை, தொழில், வியாபாராத்தில் நல்ல யோகத்தினை தரப்போகின்றனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
