Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
சுக்ராதித்ய ராஜயோகம்.. நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்களோட தலைவிதி மாறப்போகுது... உங்க ராசி இதுல இருக்கா?
Sun Venus Conjunction Make Sukraditya Rajyog In Pisces: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் சில சமயங்களில் கிரகங்கள் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து யோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதில் அசுரர்களின் குரு தான் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். இந்த சுக்கிரன் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் 14 ஆம் தேதி கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் குரு பகவானின் மீன ராசிக்கு செல்லவுள்ளார்.

இதனால் மீன ராசியில் சுக்கிரன் மற்றும் சூரியனின் சேர்க்கை நிகழவுள்ளது. இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.
இதனால் அந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றமும், தொழிலில் சிறப்பான வளர்ச்சியும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இப்போது சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் செயல்திறன் பணியிடத்தில் மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். குடும்பத்தினருடன் நிறைய நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். அரசு வேலை செய்பவர்கள் முன்னேற்றத்திற்கான சில சிறப்பு வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படப் போகிறது. பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல் லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் மிகப்பெரிய பலன்கள் கிடைக்கும். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் நீண்ட காலமாக நடந்து வந்தால், இக்காலத்தில் அது முடிவுக்கு வரும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் முயற்சித்தால் நல்ல பலன் கிடைக்கும். நிதி ரீதியாக இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடனான உறவு வலுவாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
