Latest Updates
-
புரட்டாசி மாதம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு புது வாழ்க்கை கிடைக்கும் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப்போகுதாம் -
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க...
சுக்ராதித்ய ராஜயோகம்: இன்னும் 13 நாட்களில் இந்த 3 ராசிகளின் தூங்கிக் கொண்டிருக்கும் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
Sukraditya Rajyog 2025: ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் அவ்வப்போது மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதுவும் கிரகங்களின் ராசி மாற்றங்களின் போது சில சமயங்களில் சுப அல்லது ராஜயோகங்கள் உருவாகி, அவையும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அந்த வகையில் அசுரர்களின் குருவான சுக்கிரன் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் ஆகியவற்றின் காரணியாவார். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். மறுபுறம் கிரகங்களின் தலைவனான சூரியன், ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

இந்த சூரியன் மார்ச் 14 ஆம் தேதி மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் மீன ராசியில் சுக்கிரன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் மகத்தான வெற்றியைப் பெறுவதோடு, நல்ல நிதி ஆதாயங்களையும் பெறுவார்கள். பணிபுரிபவர்களால் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்த முடியும். வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வணிகர்களின் திட்டங்கள் நல்ல லாபத்தைத் தரும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி காண்பார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நிதி ரீதியாக நன்றாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். நிதி நிலையில் உயர்வு ஏற்படும். நல்ல பொருள் இன்பம் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
