சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?

Sun Transit In Virgo 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இப்படி சூரியன் ராசியை மாற்றும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். தற்போது சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் பயணித்து வருகிறார்.

Sun Transit In Virgo 2026 These Zodiac Signs Will Face Money Problems

இந்நிலையில் சூரியன் செப்டம்பர் 17 ஆம் தேதி கன்னி ராசிக்குள் நுழையவள்ளார். இந்த கன்னி ராசியின் அதிபதி புதன் ஆவார். ஜோதிடத்தில் சூரியனும், புதனும் நண்பர்களாவர். எனவே இந்த சூரிய பெயர்ச்சி சற்று சிறப்பானது. சூரியனின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், 3 ராசிக்காரர்கள் ஏராளமான பிரச்சனைகளை நேரிடும். குறிப்பாக இந்த ராசிக்காரர்கள் தொழில், நிதி நிலை மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும். இப்போது செப்டம்பர் 17 ஆம் தேதி நடக்கும் சூரிய பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

சிம்மம்

சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பேசும் விதம் சற்று கடுமையானதாகவோ அல்லது முரட்டுத்தனமாகவோ இருக்கலாம். இது உறவுகளில் பிரச்சனைகளை அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பண விஷயத்தில் எந்த ரிஸ்க்கையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் உடன் வேலை செய்வோருடன் பிரச்சனைகள் எழலாம். உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண், தொண்டை பிரச்சனைகள் தொந்தரவு செய்யலாம்.

கும்பம்

கும்ப ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதன் விளைவாக நிறைய மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் மறைமுக எதிரிகளால் நிறைய பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. எனவே இக்காலத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். நீதிமன்ற விஷயங்களில் பல தடைகளை சந்திக்க நேரிடும்.

மீனம்

மீன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை பதற்றம் நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்து வந்தால், கூட்டாளருடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். வணிகர்கள் எந்த ஒரு புதிய ஒப்பந்தங்களையும் ஏற்றுக்கொள்ளும் முன் கவனமாக சரிபார்க்க வேண்டும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, September 16, 2026, 23:40 [IST]
Desktop Bottom Promotion