ராகுவின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை

நவகிரகங்களில் சூரியன் கிரகங்களின் அதிபதியாகக் கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தில், சூரியனும் ராகுவும் இணைவது பாரம்பரியமாக அசுபமானதாகக் கருதப்படுகிறது. ஜோதிடரீதியாக ராகுவின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஒரு நட்சத்திரத்தின் வழியாகச் சூரியன் பயணிப்பதும் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது.

Sun Transit in Swati Nakshatra Bring Troubles To These Zodiac Signs

அக்டோபர் 24 அன்று, ராகுவால் ஆளப்படும் சுவாதி நட்சத்திரத்திற்குள் சூரியன் நுழையவுள்ளார். நவம்பர் 6-ஆம் தேதி மாலை 4 மணி வரை சூரியன் சுவாதி நட்சத்திரத்தில் நிலைத்திருப்பார். இக்காலகட்டத்தில், சில ராசிக்காரர்கள் தங்கள் தொழில், நிதி நிலை மற்றும் தனிப்பட்ட உறவுகளில் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கக்கூடும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சவால்களை அனுபவிக்கப்போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சுவாதி நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கும் இந்த நேரம் பணியிடத்தில் சவால்கள் ஏற்படக்கூடும். இந்த கிரக மாற்றத்தால் அவர்கள் அதிக சவால்களையும், எதிர்பாராத தடைகளையும் சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அவர்கள் வேலையில் அதிக வேலை அழுத்தத்தை நீங்கள் சந்திக்க நேரிடும், குறிப்பிட்ட நேரத்தில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை முடிக்க முடியாமல் போகலாம்.

வியாபாரத்தில் லாபம் மற்றும் நஷ்டம் இரண்டுமே வரக்கூடியவை என்றாலும், லாபங்களை விட இழப்புகள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. எதிர்பாராத நிதி தோல்விகளை நீங்கள் சந்திக்க நேரிடும், இது மனச்சோர்வை ஏற்படுத்தும். எனவே ஒவ்வொரு நகர்வையும் மிகவும் கவனமாக வைக்க வேண்டும். அலுவலகத்தில் அவர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் மிகவும் கவனமாக செய்ய வேண்டும், இல்லையெனில் அது உங்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு, இந்த கிரக மாற்றமானது, வேலையில் அதிக பணிச்சுமை மற்றும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் சாதகமாக இருக்காது, இந்த நட்சத்திர மாற்றம் அவர்களுக்கு சோதனையான காலமாக இருக்கப்போகிறது. சூரியனின் நட்சத்திர மாற்றம் அவர்களின் தன்னம்பிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது.

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை என பல பக்கங்களிலிருந்தும் பிரச்சினைகள் வருவதைக் கண்டு அவர்கள் மனதளவில் விரக்தியடைவார்கள், மேலும் அவர்கள் சில உடல்நலப் பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும். எனவே அவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் இந்த மாதம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த மாதம் உங்களுக்கு உதவிகள் கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கும், எனவே எதற்கும் விரக்தி அடையாதீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு, சுவாதி நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கும் காலமானது, எதிர்பார்க்கும் முடிவுகளை அடைவதில் தாமதத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இந்த காலகட்டத்தில் குடும்பத்தினரிடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், மேலும் அவர்கள் வெளிநாட்டு தொடர்பான வேலைகள் அல்லது வணிகங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கும் இந்த காலம் கொஞ்சம் கடினமாக இருக்கலாம். அவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம்.

அவர்கள் தங்கள் காதல் வாழ்க்கையில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும், வேறு எந்த இடத்திற்கும் பயணம் செய்வதற்கு முன்பு நன்றாக சிந்திக்க வேண்டும். உங்கள் உடல்நலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Desktop Bottom Promotion