Latest Updates
-
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மலாய் சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 29, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கசப்பான அனுபவங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
குருபகவானின் வக்ர பெயர்ச்சியால் கோடி நன்மைகளை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முட்டை தேங்காய் குழம்பை ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல சூப்பரா இருக்கும் -
வார ராசிபலன் ( November 29-டிசம்பர் 05)- இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
இந்தியாவிலேயே அதிக குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
காரசாரமான ஹைதராபாத் சிக்கன் கறி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தரமான டேஸ்ட்ல இருக்கும் -
சனிபகவானால் டிசம்பர் 11 முதல் கஷ்டங்களை அனுபவிக்கபோகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
தாபா ஸ்டைல் மட்டர் பன்னீர் ரெசிபி - இந்த பக்குவத்துல பன்னீரை செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் வங்கி எது? அதன் பெயர் என்ன தெரியுமா?
சோப்பு நுரை ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
நாம் தினமும் பயன்படுத்தும் பல பொருட்களை ஏன் அவற்றை பயன்படுத்துகிறோம் மற்றும் அவை எப்படி செயல்படுகிறது என்பது தெரியாமலே பயன்படுத்துகிறோம். அப்படி ஒரு பொருள்தான் சோப்பு. நாம் தினமும் பச்சை, நீலம், சிவப்பு என பல வண்ண சோப்புகளை பயன்படுத்துகிறோம். அவற்றின் வடிவம், நிறம் என அனைத்தும் மாறுபட்டாலும் அதில் ஒரு விஷயம் மட்டும் மாறாது. அதுதான் சோப்பின் நுரையின் நிறம்.

சோப்பு எந்த நிறத்தில் இருந்தாலும், அதிலிருந்து உருவாகும் நுரை எப்போதும் வெள்ளை நிறத்திலேயே இருக்கும். இது அன்றாட வாழ்வில் நாம் காணும் ஒரு சாதாரண விஷயமாகத் தோன்றலாம். ஆனால், இதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான அறிவியல் காரணம் உள்ளது. அது என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சோப்பு நுரை எப்படி உருவாகிறது?
சோப்பின் நிறம் பற்றி தெரிந்து கொள்வதற்கு முதலில் சோப்பு நிறை எப்படி உருவாகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சோப்பை நீருடன் சேர்த்துத் தேய்க்கும்போது, அது காற்றைத் தனக்குள் இழுத்துக் கொள்கிறது. இதனால், சோப்பு மற்றும் நீரின் மிக மெல்லிய படலத்தால் சூழப்பட்ட சிறிய காற்றுக்குமிழிகள் உருவாகின்றன. இந்த எண்ணற்ற குமிழிகள் ஒன்றிணைந்துதான் 'நுரை'யை உருவாக்குகின்றன. இந்த முழுச் செயல்முறையும் மேற்பரப்பு இழுவிசை (surface tension) மற்றும் வேதியியல் வினைகளைச் சார்ந்தே அமைகிறது.
நுரை வெள்ளை நிறத்தில் இருக்க காரணம் என்ன?
நுரை வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு முக்கியக் காரணம் 'ஒளிச் சிதறல்' எனப்படும் நிகழ்வாகும். சூரிய ஒளி அல்லது மின்விளக்கின் ஒளி வெண்மையாகத் தோன்றினாலும், உண்மையில் அவை பல வண்ணங்களின் கலவையாகும். நுரையில் உள்ள எண்ணற்ற மிகச்சிறிய குமிழிகள் சிறிய கண்ணாடிகளைப் போலச் செயல்படுகின்றன. ஒளி அவற்றின் மீது படும்போது, அது அனைத்து திசைகளிலும் சிதறடிக்கப்படுகிறது. இதனால் நிறங்கள் மீண்டும் ஒன்றிணைந்து, நுரை வெண்மையாகத் தோன்றுகிறது.
சோப்பின் நிறம் பங்கு என்ன?
சோப்பில் சேர்க்கப்படும் நிறத்திற்கு என்னவாகிறது? சோப்பில் பயன்படுத்தப்படும் சாயத்தின் அளவு மிகவும் குறைவாகவே இருக்கும். நுரை உருவாகும்போது, அந்த நிறமானது மெல்லிய குமிழிப் படலங்களின் மீது பரவி மிக மெல்லியதாகிவிடுகிறது. இதன் விளைவாக நம் கண்களால் அந்த சோப்பின் நிற நுரையை அரிதாகவே காண முடிகிறது. இதனுடன் ஒளியின் வலுவான சிதறலும் சேர்வதால், அந்த நுரை பார்ப்பதற்கு முழுமையாக வெண்மையாகத் தோன்றுகிறது.
குமிழிகளின் அளவும் முக்கியமானது
சோப்பின் நுரையின் நிறத்தில் குமிழிகளின் அளவும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நுரையின் குமிழிகள் மிகச் சிறியவை என்பதால், அவை ஒளியை வலுவாகச் சிதறடிக்கின்றன. குமிழிகள் பெரியதாக இருந்திருந்தால், ஒளி அவற்றின் வழியாக எளிதாக ஊடுருவிச் சென்றிருக்கும். அப்போது நாம் வேறுசில நிறங்களையோ அல்லது ஒளி ஊடுருவும் தன்மையையோ காண முடிந்திருக்கும். ஆனால் குமிழிகள் மிகச் சிறியதாக இருப்பதால், அந்த நுரை பிரகாசமான வெள்ளை நிறத்தில் மட்டும் தோன்றுகிறது.



Click it and Unblock the Notifications
