Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
மிருகசீரிஷ நட்சத்திரம் செல்லும் சூரியன்: இன்று முதல் ஜூன் 22 வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்..
Sun Transit In Mrigasheersham Nakshatra On 08 June 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன், ஆன்மா, தந்தை, கௌரவம், தன்னம்பிக்கை, தலைமைத்துவம் ஆகியவற்றின் காரணியாவார். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார் மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
இப்படி சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கும். அந்த வகையில் சூரியன் தற்போது ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூன் 08 ஆம் தேதி, அதாவது இன்று சூரியன் மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் ஜூன் 22 ஆம் தேதி வரை பயணிக்கவுள்ளார்.

இந்த மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய். ஜோதிடத்தில் சூரியனும், செவ்வாயும் நட்பு கிரகங்களாக கருதப்படுகின்றன. இந்நிலையில் சூரியன் செவ்வாயின் நட்சத்திரத்திற்கு செல்வதால், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருந்தாலும், இன்னும் சில ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர பெயர்ச்சியானது வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை, சவால்களை தரலாம். இப்போது சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் தன்னம்பிக்கை குறையலாம். உங்களின் பேச்சால் பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. அலுவலக சூழல் சற்று பதற்றம் நிறைந்ததாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகும். இக்காலத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். இல்லாவிட்டால் நீங்கள் ஏமாற்றப்படலாம். உங்களின் மன அழுத்தம் அதிகரிக்கும்.
பரிகாரம்: சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க, துலாம் ராசிக்காரர்கள் தினமும் காலையில் சூரியனுக்கு செம்பு பாத்திரத்தில் நீரை அர்பணித்து வழிபாடு செய்து வர வேண்டும்.
தனுசு
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை கொண்டு வரும். தொழில் மற்றும் குடும்பம் இரண்டையும் சமநிலையில் நிர்வகிக்க முடியாமல் அவதிப்பட நேரிடும். வாழ்க்கைத் துணையுடன் மோதலை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களுடன் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு மற்றும் தொண்டை தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மாணவர்கள் இக்காலத்தில் சோம்பேறித்தனத்தை தவிர்க்க வேண்டும்.
பரிகாரம்: சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க, துலாம் ராசிக்காரர்கள் வியாழக்கிழமைகளில் விஷ்ணு பகவானை வணங்கி, வாழை மரத்திற்கு நீரை ஊற்ற வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடும். எந்த ஒரு விஷயத்திலும் எல்லையை மீறாதீர்கள். முக்கியமாக இக்காலத்தில் எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுக்காதீர்கள். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திப்பீர்கள். ஒவ்வொரு வேலையையும் பொறுமையாகவும், நன்கு சிந்தித்தும் செய்ய வேண்டும். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு நடக்காமல், உங்கள் மனம் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள்.
பரிகாரம்: சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க, துலாம் ராசிக்காரர்கள் திங்கட்கிழமைகளில் சிவலிங்கத்திற்கு நீர் அபிஷேகம் செய்து, வில்வ இலைகளை அர்ப்பணித்து வழிபட்டு வர வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


