அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்!

Sun Transit In Libra In October 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் தன்னம்பிக்கை, மரியாதை, அதிகாரம், தொழில் மற்றும் ஆளுமை ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றி, மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துவார். சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த சூரியன் அக்டோபர் மாதத்தில் துலாம் ராசிக்கு செல்லவுள்ளார்.

Sun Transit In Libra In October 2026 Will Be Unfavourable for These Zodiac Signs

இந்த துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். இந்த ராசிக்கு சூரியன் அக்டோபர் 17 ஆம் தேதி நுழைந்து, நவம்பர் 16 ஆம் தேதி வரை சுமார் 1 மாத காலம் இருப்பார். இந்த துலாம் ராசியில் சூரியன் பயணிக்கும் காலகட்டமானது ஒவ்வொரு ராசிக்காரர்களையும் ஒவ்வொரு விதத்தில் பாதிக்கும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்போது சூரியன் துலாம் ராசிக்கு செல்வதால் எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம். உங்கள் ராசி இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்

அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியின் போது மேஷ ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்களின் வியாபாரத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்களை நம்பி பண பரிவர்த்தனைகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். நீண்ட தூர பயணங்களை திட்டமிடும் போது கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை குறையும் வாய்ப்புள்ளது. எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

மிதுனம்

அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியின் போது மிதுன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சற்று சவாலானதாக இருக்கும். நிதி ரீதியாக மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதால், செலவுகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். பணியிடத்தில் தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பேசும் போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

கன்னி

அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியின் போது கன்னி ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடும். அதுவும் நிதி நிலைமை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் வெற்றி பெற அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் சில பிரச்சனைகளானது பதட்டத்தை அதிகரிக்கும். அரசு வேலைகள் இன்னும் தாமதமாக வாய்ப்புள்ளது.

துலாம்

அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியின் போது துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். தொழிலில் தடைகளை சந்திக்க நேரிடும். வேலையில் மன அழுத்தம் அதிகரிக்கலாம். தன்னம்பிக்கை குறையவும் வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையலாம். செலவுகள் அதிகரிப்பதால் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். முக்கியமாக இக்காலத்தில் நிதி முடிவுகளை எடுக்கும் போது அவசரப்படுவதை தவிர்க்க வேண்டும்.

தனுசு

அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியின் போது தனுசு ராசின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சில சவால்களை எதிர்கொள்ள நேரிடும். ஆரோக்கிய பிரச்சனைகளை புறக்கணிப்பதைத் தவிர்க்க கூடாது. வேலையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இது மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். முதலீடுகள் அல்லது பண பரிவர்த்தனைகளை செய்யும் போது அனுபவசாலிகளின் ஆலோசனையை பெற்று செய்தால், பாதுகாப்பாக இருக்கலாம்.

கும்பம்

அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியின் போது கும்ப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை வாழ்வில் சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகள் அதிகரிப்பதால் பண பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நீதிமன்ற வழக்குகளில் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக இக்காலத்தில் எந்த பிரச்சனையையும் பொறுமையாக கையாள அறிவுறுத்தப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, September 28, 2026, 19:15 [IST]
Desktop Bottom Promotion