Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 14 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது...
Sun Transit In Ashwini Nakshatra On 14 April 2025: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். அதோடு அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். இப்படி சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் சூரியன் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். அதே சமயம் அஸ்வினி நட்சத்திரத்திற்கும் செல்லவுள்ளார். இப்படி ஒரே நாளில் சூரியன் ராசியையும், நட்சத்திரத்தையும் மாற்றவிருக்கிறார்.

சூரியனின் இந்த நட்சத்திர மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். சில ராசிக்காரர்கள் இந்த நட்சத்திர மாற்றத்தால் கவனமாக இருக்க வேண்டும். இருப்பினும் சில ராசிக்காரர்கள் சூரியனின் இந்த நட்சத்திர மாற்றத்தால் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறவுள்ளனர்.
ஜோதிடத்தில் உள்ள 27 நட்சத்திரங்களில் அஸ்வினி முதல் நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதி கேது. மற்றும் இந்த நட்சத்திரம் மேஷ ராசியில் உள்ளது. இப்போது சூரியன் அஸ்வினி நட்சத்திரத்திற்கு செல்வதால் எந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறப்போகிறார்கள் என்பதைக் காண்போம்.
மிதுனம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றியைப் பெறக்கூடும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படலாம். இதனால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பல நல்ல பலன்களைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அவ்வப்போது சில நல்ல செய்திகளையும் பெறக்கூடும். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் இலக்கை அடைந்து வெற்றி பெறுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தைக் காண்பார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை நடந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருப்பதால், ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் பாராட்டைப் பெறுவார்கள். முக்கியமாக நீண்ட காலமாக வேலையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உடல் நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தால், ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைப் பெற வாய்ப்புள்ளது. போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியை வழங்குவதோடு, வெற்றியும் பெறுவீர்கள். இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். நீண்ட காலமாக நீதிமன்ற வழக்குகள் நடந்து வந்தால், இக்காலத்தில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications