Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
30 ஆண்டுகளுக்கு பின் சனி சூரியனால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
Navpancham Rajyog 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி அல்லது அதன் நிலைகளால், சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் நவகிரகங்களின் நிலைகளால் ராஜயோகங்கள் உருவாகும்.
அந்த வகையில் நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான், தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். அதே சமயம் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஜூலை 17 ஆம் தேதி சந்திரனின் கடக ராசிக்குள் நுழைந்தார். இதனால் சூரியன் மற்றும் சனி பகவானின் நிலையால் நவபஞ்ச ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகமானது சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளது.

பொதுவாக சூரியனும், சனியும் தந்தை மகனாக இருந்தாலும், இவ்விரு கிரகங்களும் எதிரிகளாக கருதப்படுகின்றனர். இருப்பினும் இந்த இரண்டு கிரகங்களினால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகமானது சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைத்து, திடீர் செல்வத்தையும், தொழிலில் முன்னேற்றத்தையும் தரப் போகிறது. இப்போது சனி சூரியனால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சனி சூரியனால் உருவாகியுள்ள நவபஞ்ச ராஜயோகமானது வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. குறிப்பாக இந்த ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி சூரியனால் உருவாகியுள்ள நவபஞ்ச ராஜயோகமானது அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கும். இதன் மூலம் பேச்சால் பல முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மேலும் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். தொழிலதிபர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகளை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். மாணவர்கள் போட்டியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சனி சூரியனால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகத்தால் பலவிதங்களில் சாதகமாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். குடும்பத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். ஜோதிடம், ஆன்மீகம், ஊடகம் அல்லது வணிகத்துடன் தொடர்புடையவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications